Ananthan Kaadu Box Office: ஆர்யாவோட ‘அனந்தன் காடு’ என்ன ஆச்சு?.. அதள பாதாளத்தில் முதல் நாள் வசூல்!

சென்னை: சந்தானத்தை வைத்து ஆர்யா தயாரித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கூட அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஒரு சில படங்களை தவிர பல படங்கள் ஆர்யாவுக்கு சரிவை தந்தாலும், சட்டென குதிரை போல எழுந்து ஒரு நல்ல படத்தைக் கொடுத்து தனது ரசிகர்களை பல ஆண்டுகளாக தக்க வைத்து வருகிறார்.

கடைசியாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி அவருக்கு பெரும் பாராட்டுக்களை அள்ளித் தந்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான அரண்மனை 3, கேப்டன், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் மற்றும் மிஸ்டர் எக்ஸ் என அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாமே ஃப்ளாப் ஆகி வருகின்றன.

Ananthan Kaadu Day 1 Box Office Collection is a huge dissappointment to Arya

இந்நிலையில், நேற்று வெளியான அனந்தன் காடு திரைப்படமாவது ஆர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே வசூல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் ஷாக் கொடுத்துள்ளன.

அனந்தன் காடு முதல் நாள் வசூல்: தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான அனந்தன் காடு படத்தின் மூலம் ஆர்யா கேரள ரசிகர்களையும் குறிவைக்க ஆரம்பித்துள்ளார். ஆனால், முரளி கோபி எழுத்தில் ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா, முரளி கோபி, இந்திரன்ஸ், சுனில், ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆனந்தன் காடு திரைப்படம் முதல் நாளில் மலையாளத்தில் 45 லட்சமும் தமிழில் 30 லட்சம் வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 75 லட்சம் மட்டுமே இந்த படம் ஈட்டியுள்ளது என்கின்றனர்.

3 நாள் விடுமுறை கை கொடுக்குமா?: தமிழ் சினிமாவில் இன்று கான் சிட்டி, அங்கீகாரம், அந்தரன், சிங்கீதம், ஹார்ட்டின் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் அனந்தன் காடு படத்துடன் போட்டியிட உள்ள நிலையில், மேலும், வசூல் அதிகரிக்குமா? அல்லது சரியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. முகரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட உள்ள நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் ஆர்யா படத்துக்கு ஓரளவு வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X