அப்பாடா கிடைச்சாச்சு ஹீரோயின்...ஜான்வி கபூர் இல்லை... விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியான இளம் நாயகி
மும்பை: புரி ஜெகநாத் இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிப்ப்து யார் என்று முடிவாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா, தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஃபைட்டர் என்று டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

புரி ஜெகநாத்
இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

ஜான்வி கபூர்
இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் இல்லை என்பது முடிவானது.

ஹீரோயின் இல்லாமல்
பின்னர் இளம் இந்தி ஹீரோயின் அனன்யா பாண்டேவிடம் பேசி வந்தனர். இதற்கிடையே, ஹீரோயின் முடிவு செய்யப்படாமலேயே இந்தப் படத்தின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. சார்மி கிளாப் அடித்து தொடக்கி வைத்தார்.

அனன்யா பாண்டே
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷு ரெட்டி, ஆழி, கெட்டப் ஶ்ரீனு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக அனன்யா பாண்டே நடிப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











