புரி ஜெகநாத் இயக்கும் படம்... விஜய் தேவரகொண்டா ஜோடியாக அந்த ஹீரோயின் நடிப்பது கன்பர்ம்தானாம்!

By

மும்பை: விஜய் தேவரகொண்டா இந்தியில் அறிமுகமாகும் படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் முடிவாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா, தமிழில், நடிகையர் திலகம், நோட்டோ, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இப்போது, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் நாளை ரிலீஸ் ஆகிறது. இதில் அதில் நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை, புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஃபைட்டர் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதை நடிகை சார்மியும் புரி ஜெகநாத்தும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழிலும் உருவாகிறது. இந்தியில் கரண் ஜோஹர், ஆபூர்வா மேத்தா தயாரிக்கின்றனர்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

இதில் ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அவர் அறிமுகமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு தனக்குப் பிடிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் இந்தப் படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே

பின்னர் இளம் இந்தி ஹீரோயின் அனன்யா பாண்டேவிடம் படக்குழு பேசி வந்தனர். அவர் இதில் நடிப்பது உறுதியாகி விடும் என்று கூறப்பட்டது. ஆனால் உறுதிச் செய்யப்படவில்லை. இதற்கிடையே, ஹீரோயின் முடிவு செய்யப்படாமலேயே இந்தப் படத்தின் தொடக்க விழா மும்பையில் நடந்தது. நடிகை சார்மி கிளாப் அடித்து தொடக்கி வைத்தார்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக அனன்யா பாண்டே நடிப்பதை படக்குழு உறுதி படுத்தியுள்ளது. இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் இறுதியில் அல்லது எப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. அனன்யா பாண்டே, பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் மகள். இந்தியில் ஸ்டூடன்ட் ஆப் த இயர் 2, 'பதி பத்னி அவுர் வோ' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X