விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சை கமெண்ட்... ரசிகர்கள் ஆத்திரத்திற்கு உள்ளான பாலிவுட் நடிகை!

மும்பை : விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வருகிறது லைகர் படம்.

Recommended Video

Vijay-SAC அரசியல் இது தான்..புட்டு புட்டு வைத்த Pandey | Tamil Filmibeat

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பாலிவுட் ஹீரோயின் அனன்யா பாண்டே.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்த அனன்யா பாண்டேவின் கமெண்ட் அவரது ரசிகர்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

லைகர் படம்

லைகர் படம்

இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் லைகர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.கரண் ஜோஹர் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

அமெரிக்காவில் படப்பிடிப்பு

அமெரிக்காவில் படப்பிடிப்பு

படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டா மற்றும் மைக் டைசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டன. இதன் புகைப்படங்களை தேவரகொண்டா சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின.

அனன்யா பாண்டே கமெண்ட்

அனன்யா பாண்டே கமெண்ட்

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் நாயகி அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டா குறித்து செய்துள்ள கமெண்ட் அவரது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

பயந்தாங்கொள்ளி விஜய் தேவரகொண்டா

பயந்தாங்கொள்ளி விஜய் தேவரகொண்டா

அனன்யா பாண்டேவின் சமீபத்திய பேட்டியில், தன்னுடைய படங்களில் தைரியம் மிக்கவராகவும் முரடனாகவும் நடிக்கும் விஜய் தேவரகொண்டா நிஜத்தில் மிகவும் அமைதியானவர் என்றும் சினிமாவில் காட்டும் வீரத்தை நிஜத்தில் அவர் காட்டுவதில்லை என்றும் உண்மையில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

அனன்யாவின் தேவரகொண்டா குறித்த இந்த வெளிப்படை கருத்து தேவரகொண்டாவின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவர்கள் இதுகுறித்து கோபத்தை பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துள்ள அனன்யா, வாயை கொடுத்து இவ்வாறு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X