கிளப்புக்கு போன வாரிசு நடிகை: வாசலோடு விரட்டிவிட்ட பவுன்சர்கள்?
மும்பை: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மும்பையில் உள்ள ஒரு கிளப்பிற்கு சென்றபோது அவரை உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா அப்பா வழியில் நடிக்க வந்துள்ளார். அனன்யா நடித்த முதல் படமான ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 அண்மையில் வெளியானது. படத்தை பாராட்டுபவர்கள் பாராட்டினாலும் கலாய்த்தவர்கள் தான் அதிகம்.
அனன்யா அடுத்ததாக பதி பத்னி அவுர் வோ படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் கார்த்திக் ஆர்யன், புமி பெட்னேகர் ஆகியோரும் உள்ளனர்.

கிளப்
அனன்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை லோயர் பரேலில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றுள்ளார். ஆனால் அவரை கிளப்புக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்களாம். அதற்கு காரணம் அனனன்யா பாண்டேவின் வயது தானாம்.

அனன்யா
அனன்யா சென்ற கிளப்பில் 24 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதியாம். அனன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. அதனால் இந்த கிளப்பிற்கு வரும் அளவுக்கு உங்களுக்கு இன்னும் வயது வரவில்லை என்று கூறி வாசலோடு அனுப்பி வைத்துவிட்டார்களாம். வேறு வழி இல்லாமல் அனன்யாவும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

அமெரிக்கா
முன்னதாக அனன்யா படிப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். அமெரிக்காவில் உள்ள சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படிக்க சீட் கிடைத்தது. அங்கு கிளம்பியபோது ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் லுக் டெஸ்ட் நடந்தது. சரி சும்மா முயற்சி செய்யலாமே என்று அந்த லுக் டெஸ்டில் கலந்து கொண்டு தேர்வானேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் அனன்யா.

பொய்
அனன்யாவின் பேட்டியை பார்த்த அவரின் பள்ளித் தோழி ஒருவர் அவருக்கு சவுத் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்கவில்லை என்றும், பேட்டிகளில் பொய் சொன்னதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அனன்யாவுக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்க சீட் கிடைத்ததாக அவரின் அம்மா பாவ்னா பாண்டே கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனன்யாவின் பள்ளித்தோழி வேறு மாதிரி கூறியுள்ளார். ஆனால் இது குறித்து அனன்யா இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











