போதை பொருள் வழக்கில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை... விஜய் படத்தில் இருந்து நீக்கம்?

சென்னை: போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ள பிரபல நடிகை விஜய்யின் தளபதி 66 படத்தில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். அவரது படம் கோடிகளை குவிப்பதால் வசூல் மன்னனாகவும் வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை கொண்டுள்ளார் விஜய்.

பெரும்பாலான காட்சிகள் நிறைவு

பெரும்பாலான காட்சிகள் நிறைவு

தற்போது நடிகர் விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 66வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி விஜய்யின் 66வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.

நடிகை அனன்யா பாண்டே

நடிகை அனன்யா பாண்டே

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டேவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே தெலுங்கிலும் பிரபலமானவர் என்பதால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது.

கஞ்சா ஏற்பாடு செய்வதாக..

கஞ்சா ஏற்பாடு செய்வதாக..

ஆனால் தற்போது அனன்யா பாண்டே, போதை பொருள் வழக்கில் சிக்கியுள்ளதால் அவர் படத்தில் தொடருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்வதாக வாட்ஸ் அப்பில் சாட் செய்திருந்தார் அனன்யா.

விசாரண வளையத்தில் நடிகை

விசாரண வளையத்தில் நடிகை

இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தியதோடு அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக படப்பிடிப்பில் எந்த சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது படக்குழு. இதனால் அனன்யா பாண்டே விஜய் படத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X