என்னை கூனி, கூனி என்று கிண்டல் செய்தார்கள்: வாரிசு நடிகை வருத்தம்
மும்பை: பள்ளியில் சக மாணவ, மாணவியர் தன்னை கேலி செய்ததாக நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சங்க்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாகியுள்ளார். பாலிவுட்டுக்கு ஏற்றது போன்று ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் அனன்யாவுக்கு தான் நன்றாக இல்லையோ என்ற எண்ணம் இருந்துள்ளது.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பிரச்சனைகள்
பள்ளியில் படித்த போது சீருடை அணிவோம். நெயில் பாலிஷ், கண் மை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. அப்பொழுது எனக்கு மன அழுத்தம், தேர்வுகள், உடல் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் இருந்தன.

வெயிட்
நான் மிருகம் போன்று சாப்பிட்டாலும் ரொம்பவே ஒல்லியாக இருக்கிறேன். அனைவருக்கும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசை. நான் முன்பு குச்சியாக இருந்தேன். தற்போது தான் ஓரளவுக்கு பரவாயில்லை. பள்ளியில் ஸ்கர்ட் அணிந்ததால் குச்சியான கால்கள் தெரியும், கைகளும் குச்சி, குச்சியாக நீளமாக இருக்கும்.

கூனி
நான் உயரம் என்பதால் யாரிடமாவது பேசினால் குனிந்து தான் பேசுவேன். அதனால் என்னை கூனி என்று பள்ளியில் கிண்டல் செய்தார்கள். பள்ளியில் கேலி கிண்டலுக்கு ஆளானதால் தான் தற்போது யார் என்னை சமூக வலைதளங்களில் கலாய்த்தாலும் அது என்னை பாதிப்பது இல்லை.

அப்பா
வாரிசுகள் வருவது சினிமாவில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் உள்ளது. எங்கள் தந்தையை நினைத்து பெருமைப்படுகிறோம். எங்களின் தந்தை நடிகர் என்பதால் வெட்கப்பட விரும்பவில்லை. நடிகரின் மகளாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்கிறார் அனன்யா பாண்டே.


Click it and Unblock the Notifications











