Bigg Boss 7 - பிக்பாஸ் 7..வீட்டிலிருந்து வெளியே வரப்போகும் முதல் ஆள் இவரா?..எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7ஆவது சீசனில் முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறுபவர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் இந்த சீசன் ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. அதிலும் இரண்டு வீடுகள், புது ரூல்ஸ்கள், முதல் வாரமே இரண்டு நாமினேஷன்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்காதது அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன.

களைகட்டும் வீடு: முக்கியமாக போட்டி ஆரம்பித்த இரண்டாவது நாளே கேப்டனை கவர தவறியதற்காக பவா செல்லதுரை, நிக்ஸன், வினுஷா, அனன்யா, ரவீனா, ஐஷு ஆகியோர் முதல் ஆறு பேராக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு ரூல்ஸை மீறியதன் காரணமாக விசித்திரா, யுகேந்திரன் ஆகியோ ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர்.

Ananya Rao is The First Elimination in Bigg Boss 7

சர்ச்சையில் விசித்திரா: இந்த சீசனின் முதல் சண்டையை ஆரம்பித்து வைத்தவர் பிரதீப் ஆண்டனியாக இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே சர்ச்சையில் சிக்கிவருபவராக இருக்கிறார் விசித்திரா. முதலில் சக போட்டியாளரின் ஆடை குறித்து பேசியது; பிறகு அனன்யாவின் உடம்பில் இருக்கும் டாட்டூவை காட்ட சொன்னது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் ஹவுஸ் மேட்ஸ்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றது.

ஜோவிகா Vs விசித்திரா: இன்றுகூட ஒரு டாஸ்க்கின்போது விசித்திராவிடம் அனன்யா ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள் என சொல்ல அதற்கு நீண்ட விளக்கம் அளித்தார் விசித்திரா. மேலும் படிப்பு பற்றி ஏன் பேச வேண்டும் என ஜோவிகா கேட்க அதற்கு விசித்திரா பதிலளிக்கும்போது ஜோவிகா உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த பிக்பாஸ் சீசனில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

நாமினேஷன்: இந்த சூழலில் இந்த வார நாமினேஷனில் பவா செல்லதுரை, அனன்யா, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் இருக்கின்றனர். இதில் யார் வெளியே போகப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதன்படி பவா செல்லதுரை, விசித்திரா, யுகேந்திரன் ஆகிய மூன்று பேரில் யாராவது ஒரு ஆள் முதலில் வெளியே செல்லலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதலில் வீட்டை விட்டு வெளியேறுபவர் குறித்து புதிய தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.

Ananya Rao is The First Elimination in Bigg Boss 7

யார் அவர்: அதன்படி அனன்யா ராவ்தான் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் இதுவரை குறைந்த வாக்குகளே பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் முதல் வாரம் நாமினேஷன் இருக்கும் ஆனால் எவிக்‌ஷன் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். முக்கியமாக நாளையும், நாளை மறுநாளும் கமல் ஹாசன் ஹவுஸ் மேட்ஸிடம் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X