வீட்டுக்கு வந்த 'மாஜி' ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்!

By Shankar

அனன்யாவைப் பார்க்க அவரது வீடு தேடிவந்த 'மாஜி மாப்பிள்ளை' ஆஞ்சநேயனை விரட்டியடித்துள்ளனர் அனன்யா குடும்பத்தினர்.

கேரள தொழிலதிபர் ஆஞ்சநேயனுக்கும் நடிகை அனன்யாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கெனவே திருமணமாகி, குழந்தையெல்லாம் உள்ள விவரம் பின்னர்தான் அனன்யா குடும்பத்துக்கு தெரிய வந்தது.

ஆனால் ஆஞ்சநேயன் முதல் மனைவியை பிரிய விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பதாகவும், இது அனன்யாவுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார். ஆஞ்சநேயனை திருமணம் செய்வதில் உறுதியாக இருப்பதாக சில தினங்கள் வரை சொல்லிக் கொண்டிருந்த அனன்யா, திடீரென தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

அப்போதுதான் அனன்யாவைப் பார்க்க அவரது சொந்த ஊரான பெரும்பாவூருக்கு வந்தாராம் ஆஞ்சநேயன். ஆனால் அவரிடம் பேச மறுத்த அனன்யா குடும்பத்தினர், அவரை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்காமல் விரட்டிவிட்டார்களாம்.

இதைத் தொடர்ந்து திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் அனன்யா குடும்பத்தினார். ஆனால் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாக ஆஞ்சநேயன் சொல்லி வருகிறார்.

இன்னொரு பக்கம், திருமணம் நின்ற கையோடு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டார் அனன்யா.

சமீபத்தில்தான் இவர் நடித்த மலையாளப் படமான மாஸ்டர்ஸ் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் புதிய பட வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளன. ஆஞ்சநேயனுடனான திருமணம் தள்ளிப் போயுள்ளதால், அடுத்தடுத்த படங்களுக்கு தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

தமிழிலும் அவர் சில படங்களில் நடிக்க பேசி வருகிறார்.

திருமண விவகாரம், மீண்டும் நடிப்பது குறித்து அனன்யா கூறுகையில், "என் திருமணத்தை பற்றி தினமும் நிறைய வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கின்றன. இது என் தனிப்பட்ட விவகாரம். பொதுவில் பேச விரும்பவில்லை. இனி திருமணம் குறித்து யாரும் என்னிடம் பேச வேண்டாம். சினிமாவில் இப்போது பிஸியாகி வருகிறேன்," என்றார்.

இதுகுறித்து 'பவர் ஸ்டார்' கெட்டப்பிலிருக்கும் ஆஞ்சநேயன் கூறுகையில், "யாரோ மூன்றாவது நபர் சூழ்ச்சி செய்து எங்களைப் பிரித்துவிட்டார்கள். அவர்கள் விருப்பப்படி செய்யட்டும். நான் என்ன சொல்ல முடியும்," என்றார் சோகமாக!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X