தமிழில் அறிமுகம்.. விஜய்சேதுபதியுடன் தெலுங்கு நடிகை வெட்கப் போட்டோ.. ஏன் அப்படி சொல்லியிருக்காங்க?

By

சென்னை: தமிழில் அறிமுகமாக இருக்கும் பிரபல தெலுங்கு நடிகை, விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவு செய்துள்ளார். இந்த வெட்கப் போட்டோவுக்கு ரசிகர்கள் ஜாலி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதையடுத்து, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த மாதம்

கடந்த மாதம்

அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷுட்டிங் கடந்த மாதம் முடிந்துவிட்டது. அடுத்து ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.

வெளியேறிய ஸ்ருதி

வெளியேறிய ஸ்ருதி

இதன் படப்பிடிப்பில் அதிக கூட்டம் கூடியதால் கோவிட்-19 விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி ஸ்ருதி வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே, துக்ளக் தர்பார் படத்தில் நடிக்கிறார், விஜய் சேதுபதி. இதில் ராஷி கண்ணா அவர் ஜோடியாக நடிக்கிறார்.

தெலுங்கு உப்பெனா

தெலுங்கு உப்பெனா

தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள த்ரில்லர் படத்தில் டாப்ஸியுடன் நடித்து முடித்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து நடித்து வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் உப்பெனா என்ற படம் வெளியாக இருக்கிறது.

அனுபமா பரத்வாஜ்

அனுபமா பரத்வாஜ்

இதற்கிடையே தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ், விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், வெட்கத்துடன் சிரித்தபடி இருக்கும் அவர், புத்திசாலித்தனத்துடனான பிணைப்பு என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

ஏன் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்பது அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ரசிகர்கள் தலையை பிய்த்தபடி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்று தெரிகிறது. இதுபற்றி அடுத்த இன்ஸ்டா பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X