சில்க் ஸ்மிதா பயோபிக்.. 'அவள் அப்படித்தான்' படத்தில் நடிக்கிறேனா? பிரபல நடிகை விளக்கம்!

By

சில்க் ஸ்மிதா பயோபிக்.. 'அவள் அப்படித்தான்' படத்தில் நடிக்கிறேனா? பிரபல நடிகை விளக்கம்!

சென்னை: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் நடிக்கவில்லை நடிகை அனசுயா மறுத்துள்ளார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி சினிமா உருவாகிறது.

இந்த பயோபிக் படத்துக்கு, 'அவள் அப்படித்தான்' என்ற டைட்டில் வைத்துள்ளனர்.

தின்ன ஆசையா

தின்ன ஆசையா

காயத்ரி பிலிம்ஸ் சார்பில் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் சார்பில் எச்.முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இதை இயக்குகிறார். இதில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க பல நடிகைகளிடம் பேசி வந்தனர்.

ரங்கஸ்தலம்

ரங்கஸ்தலம்

இந்நிலையில் தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் நடிப்பது உறுதியானதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றுள்ள அனசுயா, தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு புதிய தொடக்கம்.. கோலிவுட் என்று கூறியிருந்தார்.

தவறானத் தகவல்

தவறானத் தகவல்

இதையடுத்து அவர் சில்க் ஸ்மிதா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதை மறுத்துள்ளார் அனசுயா. இதுபற்றி ட்விட்டரில் அவர், நான் சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடிக்கவில்லை. நன்றி என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அது தவறானத் தகவல் என்று தெரிகிறது.

பொருத்தமான நடிகை

பொருத்தமான நடிகை

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சித்ரா லட்சுமணனும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, சில்க் சுமிதா கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிகையை தேடி வருகிறோம். இதில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. அவர் நடித்தால் மகிழ்ச்சிதான். பொங்கலுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

சில்க் இல்லாத

சில்க் இல்லாத

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்தவர் சில்க் ஸ்மிதா. 1980 முதல் 1990 வரை அவர் இல்லாத படங்கள் குறைவு. அனைத்து மொழிகளிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையைத் தழுவி, இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் சினிமா உருவானது. இதில் வித்யா பாலன், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்தார். இதில் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. மலையாளத்திலும் சில்க்கின் கதையை மையப்படுத்தி படங்கள் வெளியாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X