எனக்கு கொரோனா அறிகுறி.. என்னை சந்திச்ச எல்லாரும் டெஸ்ட் பண்ணிக்குங்க.. பிரபல நடிகை அறிவிப்பு

By

ஐதராபாத்: தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அடுத்து தன்னைச் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். அங்கு பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

தமிழ் படத்தில்

தமிழ் படத்தில்

அதில், வெட்கத்துடன் சிரித்தபடி இருக்கும் அவர், புத்திசாலித்தனத்துடனான பிணைப்பு என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனால் அவர் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. பின்னர் மணிகண்டன் இயக்கும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் இவர் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் எனக் கூறப்பட்டது.

டிவி நிகழ்ச்சி

டிவி நிகழ்ச்சி

அந்த செய்தியை நடிகை அனசுயா மறுத்திருந்தார். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக, விருது பெற்றவர். மேலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர், தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.

கொரோனா அறிகுறி

கொரோனா அறிகுறி

இவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி அவர், நிகழ்ச்சி ஒன்றுக்காக கர்னூல் செல்ல இருந்தேன். கொரோனா அறிகுறி இருப்பதால், அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டேன்.

நடிகை நிஹரிகா

நடிகை நிஹரிகா

விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவரை, கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை நிஹரிகா உட்பட சிலர் சமீபத்தில் சந்தித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X