Pushpa 2 - புஷ்பா 2.. அல்லு அர்ஜுன் ரொம்பவே கவனமாக இருக்கிறார்.. நடிகை ஓபன் டாக்
சென்னை: Pushpa 2 (புஷ்பா 2) புஷ்பா 2 படம் குறித்து அல்லு அர்ஜுன் ரொம்பவே கவனமாக இருக்கிறார் என்று அனசுயா தெரிவித்திருக்கிறார்.
சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

விறுவிறுப்பான பணிகள்: முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பிற நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஷூட் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபஹத் பாசில் போர்ஷன்: புஷ்பா படத்தில் பன்வர் சிங் செகாவாட் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக அவரது லுக் வித்தியாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர். இந்தச் சூழலில் புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் ஃபஹத் பாசில் நடித்த போர்ஷனுக்கான ஷூட்டிங் தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. படத்தின் டீசரும் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
அனசுயா: இந்நிலையில் நடிகை அனசுயா புஷ்பா 2 படம் குறித்து பேசுகையில், “மக்களின் மத்தியில் புஷ்பா முதல் பாகம் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றதன் காரணமாக இரண்டாவது பாகத்துக்காக அல்லு அர்ஜுன் ரொம்பவே கடினமாக உழைக்கிறார். புஷ்பா 2 குறித்த எந்த மாதிரியான பேச்சு சமூக வலைதளத்தில் ஓடினாலும் அதனை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுகிறார்.
கவனம்: புஷ்பா 2 படத்துக்கு அதிகமான எதிர்பார்ப்பும் ஆதரவும் இருப்பதை சோஷியல் மீடியா மூலம் அல்லு அர்ஜுன் அறிந்துகொண்டார். எனவே அதற்கு தகுந்தபடி கதையில் எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல் மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என சொல்கிறார். அந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார்” என்றார். முன்னதாக புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் தேசிய விருது வாங்கியது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











