அந்த மாதிரி போட்டோஸ் பதிவிட்டு.. ட்ரோலர்களுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த நடிகை.. நெட்டிசன்ஸ் கப்சிப்
சென்னை: தனது உடை குறித்து நெட்டிசன்ஸ் விளாசியதால், பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஒருவர்.
பிரபல மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன். அங்கு பல படங்களில் நடித்துள்ளார்.
சரவணன் இயக்கும் ராங்கி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இதில் த்ரிஷா ஹீரோயின்.

உதஹரணம் சுஜாதா
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான உதஹரணம் சுஜாதா என்ற மலையாள படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர். இதில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான தண்ணீர் மதன் தினங்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

மிஸ்டர் சான்டா
அதில் கீர்த்தி என்ற கேரக்டரில் நடித்தார். இதையடுத்து திலீப், சன்னி வெய்ன் நடித்த மிஸ்டர் சான்டா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். 18 வயது ஆன நடிகை அனஸ்வரா ராஜன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் அவருக்கு.

இந்த வயசுல
அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் ஷேர் செய்து வரும் அனஸ்வரா, கடந்த சில நாட்களுக்கு முன் ஷார்ட்ஸ் அணிந்த போட்டோவை பதிவு செய்திருந்தார். அதற்கு இந்த வயசுல கால்கள் தெரியும்படி, இப்படிதான் டிரெஸ் போடுவீங்களா என்று நெட்டிசன்ஸ் விளாசியிருந்தனர். சிலர் ஆபாசமாகவும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பாத்ரூம் செல்ஃபி
'நான் என்ன செய்றேன்னு நீங்க கவலைப்படாதீங்க என்று அப்போது பதிலடி கொடுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக நடிகைகள் உள்பட பலர் கருத்துத் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து #YesWeHaveLegs என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இந்நிலையில், ட்ரோலர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கால்கள் தெரியும்படி ஸ்டில்களை இப்போது வெளியிட்டுள்ளார்.

மலையாளப் பெண்கள்
கால்கள் தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள பாத்ரூம் செல்ஃபி ஸ்டில்கள் வைரலானது. வழக்கம் போல இதற்கும் கன்னாபின்னா கருத்துகளை சில நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர். மலையாளப் பெண்களுக்கு இது சரியானதல்ல என்று சிலர் கூறியுள்ளனர். பலர் கப்சிப்பாகி விட்டனர்.


Click it and Unblock the Notifications











