Retro FDFS: பட்டாசு வெடித்து.. ஆண்கள், பெண்கள் என கனிமா பாட்டுக்கு செம ஆட்டம்.. ரெட்ரோ FDFS வேறலெவல்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்த ரெட்ரோ திரைப்படம் இன்று வெளியாகிறது. ப்ரீமியர் காட்சிகள் ஏதும் இல்லாத நிலையில், காலை 9 மணிக்குத்தான் சிறப்பு காட்சிகளுடன் படம் வெளியாகிறது. காலை முதலே சூர்யா ரசிகர்கள் அனைத்து தியேட்டர்களிலும் குவிந்து FDFS கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த பல வருடங்களாக தியேட்டரில் சூர்யா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு என்பதே கிடைக்கவில்லை. பாகுபலி அளவுக்கு ஒரு பீரியட் படத்தை எடுத்து வசூல் வேட்டை நடத்த வேண்டும் என எண்ணி 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் காலை வாரிவிட்டது.

ஆனாலும், கொஞ்சம் கூட கலங்காமல் அடுத்த படத்தின் மூலம் எப்படி கம்பேக் கொடுக்கிறேன் பாருங்கடே என ரெட்ரோ மூலம் தனது பாக்ஸ் ஆபீஸ் ராஜ்ஜியத்தை மீண்டும் நிர்மானிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா. உழைப்பாளர் தினத்தன்று கடும் உழைப்பாளியான நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தியேட்டர்களை தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ FDFS கொண்டாட்டம்: கடந்த ஏப்ரல் 27ம் தேதி டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் ஏகப்பட்ட தியேட்டர்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. முதல் நாள் முழுமைக்குமான டிக்கெட்டுகள் அடுத்தடுத்த நாட்களில் அமோக விற்பனையை சந்தித்து வந்த நிலையில், மிகப்பெரிய ஓபனிங்கை ரெட்ரோ கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் FDFS கொண்டாட்டத்தை சூர்யா ரசிகர்கள் தற்போது வேறலெவலில் தியேட்டர்களுக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.
பட்டாசு வெடித்து: பட்டாசு வெடித்து, பாலபிஷேகம் செய்து, மேள தாளங்கள் முழங்க ஆண்களும் பெண்களும் ஆட்டம் போட்டு ரெட்ரோ படத்தின் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர். காலை 9 மணிக்கு ரெட்ரோ திரைப்படம் வெளியான உடனே சோஷியல் மீடியாவில் ஒவ்வொரு சீனாக நெட்டிசன்கள் போட ஆரம்பித்து விடுவார்கள். படம் குறித்த விமர்சனங்களும் வரத் தொடங்கிவிடும். அதற்கு முன்னதாக எப்போதும் போல சூர்யா படத்தைக் கொண்டாடி விட வேண்டும் என அவரது அன்பான ஃபேன்ஸ் ஆட்டம் போட்டு வருகின்றனர்.
மிஸ் ஆகாது: இந்த முறை கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவுக்கு நிஜமாகவே தரமான சம்பவத்தை செய்திருப்பார் என்றே ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அயன், சிங்கம், வாரணம் ஆயிரம், கஜினி, சிங்கம் 2 படங்கள் எல்லாம் எப்படி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியதோ அதே அளவுக்கான வசூல் வேட்டையை ரெட்ரோ படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லியை முந்துமா?: ரெட்ரோ திரைப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தாண்டி பிளாக்பஸ்டர் விமர்சனங்கள் வந்துவிட்டால் கண்டிப்பாக அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வசூலை நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். மினிமம் 100 கோடி முதல் 150 கோடி வரை ரெட்ரோ வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோவுக்கு போட்டியாக இந்தியில் ரெய்டு 2, தெலுங்கில் ஹிட் 3, தமிழில் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











