நாங்க பயந்துடுவோம்னு நினைக்காதீங்க சிஎம் சார்.. GENZ DMK ஒருங்கிணைப்பாளர் கைது.. ஜூலி ஆதங்கம்!

சென்னை: 'GENZ DMK' கூட்டங்களை மிகத் தீவிரமாக ஒருங்கிணைத்து வரும் முக்கிய இளைஞர்களில் ஒருவரான அன்பாநந்தன் அரியப்பன், நேற்று நள்ளிரவு கிருஷ்ணகிரியில் சொந்த கிராமத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த நள்ளிரவு கைது விவகாரம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் இதை கண்டித்து பிக் பாஸ் புகழ் ஜூலி கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவில் கைது : நேற்று இரவு 12 மணி அளவில் அன்பாநந்தன் அரியப்பன் அண்ணாவை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவரது உறவினர்கள் போலீசாரிடம் கைது செய்வதற்கான வாரண்ட் கேட்டதற்கு... ஸ்டேஷனுக்கு வாங்க வாரண்ட் தருகிறோம் என்று சொல்லி அழைத்துச் சென்றுள்ளார்கள். நான் கேட்பது என்னவென்றால், இந்த ஜனநாயக நாட்டில் உங்களுக்கு எதிராக ஒரு கருத்தை யாராவது பதிவு செய்தால், அவர்களை இப்படித்தான் நள்ளிரவில் ஒடுக்குவீர்களா? இதுதான் உங்களுடைய அரசாங்கமா? இதற்குத்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்களா சிஎம் சார்?

Bigg boss Julie DMK
Photo Credit:

ஏன் கைது செய்யல: எம்.எல்.ஏ சரவணன் ஒரு பெண் தன்னை அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் புகார் கொடுத்தும்... எம்.எல்.ஏ சரவணனை ஏன் நீங்கள் இன்னும் கைது செய்யவில்லை? இன்று கூட கல்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 14 வயது சிறுமியை இரண்டு பேர் அத்துமீறி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இப்படிச் சீர்கெட்டுக் கிடக்கிறது, குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை நிறுத்துவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இப்போது எங்களுடைய வாய்ஸை கட்டுப்படுத்துவதுதான் உங்களுடைய முதல் குறிக்கோளா? ஆட்சிக்கு வந்தவுடன் யாரெல்லாம் எதிராகப் பேசுகிறார்களோ, அவர்கள் மீது கேஸ் போடுவதுதான் உங்களுடைய ஜனநாயக ஆட்சியா?

பயந்து சும்மா இருக்க மாட்டோம்: நேற்று சட்டப்பேரவையில் அவ்வளவு பேசினீங்க சிஎம் சார்... நடவடிக்கை எடுப்போம்.. மாஸ் அப்படி இப்படினு சொன்னீங்க. ஆனால் நைட்டானதும் இப்படிப் பயந்து போய் நள்ளிரவில் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களே. இதையெல்லாம் பார்த்து நாங்கள் பயந்து பேசாமல் இருந்துவிடுவோம் என்று நினைக்கவே நினைக்காதீர்கள். இன்னும் தைரியமாக, இன்னும் ஸ்ட்ராங்காக எங்களுடைய கருத்துக்களை நாங்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்து கொண்டே தான் இருப்போம்.

Bigg boss Julie DMK
Photo Credit:

வேலையை பாருங்க: நாட்டில் இவ்வளவு குற்றங்கள், அத்துமீறல்கள் நடக்கும்போது அதற்கெல்லாம் வாயைத் திறக்காமல், நடுராத்திரியில் ஒரு சாதாரணக் குடும்பத்தினரை மிரட்டி கைது செய்வது சரியா.. நீங்கள் யாரை அடக்க முயற்சி செய்கிறீர்கள்? நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் முதலில் வாயைத் திறங்கள். எங்களை அடக்குவதை விட்டுவிட்டு, மக்களுக்காக ஏதாவது உருப்படியாக வேலையைப் பாருங்கள் என்று தமிழக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் ஜூலி வெளுத்து வாங்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X