For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குஷ்பு: விஜயகாந்த்துக்கு ஒட்டா-உறவா-பாசமா? குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா என்று தெரியவில்லை எனகாங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார்.முன்னாள் எம்.பியான அன்பரசு இப்போது காங்கிரஸ் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ்தலைவர் பதவியைப் பிடிக்க பல ஆண்டுகளாக அவர் முயன்று வந்தாலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.இந் நிலையில் கட்சியில் தன்னை நிலை நிறுத்துக் கொள்ள காங்கிரஸ் கண்டுகொள்ளாத குஷ்பு விஷயத்தை இவர்மட்டும் கையில் எடுத்துள்ளார்.இந்த விவகாரத்தில் திருமாவளவனுடன் இணைந்து போராடுவது என அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகஅன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,குஷ்பு தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிவிட்டு கவலையின்றி தமிழ்நாட்டில் நடமாடுகிறார். இதேபோன்று வட மாநிலத்துப் பெண்களைப் பற்றி தவறாக பேசிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினியால் அங்குநிம்மதியாக இருக்க முடியுமா? இந்த உணர்வு தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஏன் வரவில்லை என்று டெல்லி வாழ் தமிழர்கள் என்னைகேட்கிறார்கள். வட இந்திய பெண்கள் கூட குஷ்பு பேசிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.மன்னிப்பு கேட்டு விட்டால் இந்த பிரச்சினை ஓய்ந்து விடும் என்று குஷ்பு நினைக்கலாம். ஆனால் இந்தபிரச்சினையை தமிழர்களாகிய நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடக்கூடாது. குஷ்புவுக்கு சரியான பாடம்புகட்ட வேண்டும்.குஷ்பு விவகாரத்தில் விஜயகாந்த் ஒதுங்கிக் கொள்வது ஒட்டா-உறவா-பாசமா தெரியவில்லை.இந்தப் பிரச்சனை தமிழர்களுக்கு சவால் விடும் பிரச்சினையாக இருப்பதால், குஷ்புவை எதிர்த்து போராட்டம்நடத்தி வரும் தொல். திருமாவளவன் போன்றோருடன் நானும் இணைந்து போராடுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  By Staff
  |

  எனது பேச்சால் நடிகர், நடிகையரின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் தங்கர் பச்சான் கூறினார். மேலும் இன்று நடிகர் சங்கத்துக்கு நேரில் சென்றும்மன்னிப்பு கேட்டார் தங்கர்.

  இதையடுத்து இன்று முதல் நடிகர், நடிகைகள் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

  நடிகைகள் குறித்து தங்கர்பச்சான் பேசப் போக அது நடிகர், நடிகைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியது. நவ்யா நாயர் குறித்து கோபத்தோடு பேசிய தங்கர் மிக மோசமான வார்த்தைகளைவபயன்படுத்தினார்.

  இதையடுத்து தங்கரை கண்டித்து இன்று முதல் (திங்கள்கிழமை) காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைதென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்தது. இதனால் இன்று நடக்கவிருந்த உள்ளூர், வெளியூர் சூட்டிங்குகள் ரத்துசெய்யப்பட்டன.

  இந் நிலையில் தங்கர்பச்சான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

  நடிகர், நடிகைகளை அவதூறாகப் பேச வேண்டும் என்று நான் எதையும் பேசவில்லை. நான் யாரையும் குறைகூறவில்லை, புண்படுத்தவும் இல்லை. ஒருவேளை எனது பேச்சு நடிகர், நடிகையருக்கு மன வருத்தத்தைஏற்படுத்தியிருந்தால், புண்படுத்தியிருந்தால், பகிரங்கமாக, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்.

  என்னை எல்லோரும் மன்னித்து விடுங்கள். எனது நிலையை விளக்குவதற்காக விஜயகாந்தை சந்திக்க சென்றேன்.திருப்பதி சென்று விட்டதால் பிறகு பேசலாம் என்று கூறினார்.

  நான் தவறாக பேசியிருக்க மாட்டேன் என்று நம்புவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

  இந் நிலையில், நடிகர், நடிகைகள் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.இதையடுத்து சரத்குமாரை மகாபலிபுரம் அருகே படப்பிடிப்பில் சந்துத்து விளக்கினேன். 29ம் தேதி பேசலாம்என்றார்.


  இன்று (ஞாயிற்றுக்கிழமை) இருவரையும் சந்தித்து மன்னிப்பு கேட்கலாம் என்று முடிவு செய்து நடிகர் சங்கம்சென்றேன். ஆனால் அவர்கள் எனக்கு அந்த வாய்ப்பை அளிக்கவில்லை.

  கடந்த 3 நாட்களாக மன்னிப்பு கடிதம் கொடுக்க தயாராக இருந்தும் அவர்கள் என்னை சந்திக்க விரும்பவில்லை.எனது பிரச்சினையை முன் வைத்து நடிகர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்திருப்பது மன உளைச்சலைஅளித்துள்ளது.

  என்னால் ஏதாவது மனக் கஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

  எனது நிலையை விளக்கி நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டேன் என்றார் தங்கர்பச்சான்.

  இதையடுத்து நடிகர் சங்க நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக் கூட்டத்திற்குப் பின்னர்விஜயகாந்த்தும், சரத்குமாரும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

  அதில், தங்கர்பச்சான் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள் வாயிலாக தான் பேசியது தவறு என்று பகிரங்கமாகமன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தங்கர்பச்சானை நடிகர்சங்கத்திற்கு அழைத்து வந்து மன்னிப்பு கேட்பதாக உறுதிமொழி அளித்துள்ளதாலும்,

  திரையுலக நலன் கருதி திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நடிகர், நடிகையர் வழக்கம் போல பணிக்குத்திரும்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

  இந் நிலையில் இன்று பிற்பகலில் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்த தங்கர்பச்சான், நவ்யா நாயர் குறித்த தனதுவிமர்சனத்துக்காக நேரில் மன்னிப்பு கேட்டார்.

  முன்னதாக அவர் காலையில் வருவார் என்று எதிர்பார்த்து விஜய்காந்த் மற்றும் நிர்வாகிகளும், விந்தியா, தேஜாஸ்ரீ, ஸ்ரீபிரியா,சங்கவி, மனோராமா, குஷ்பு ஆகிய நடிகைகளும் காத்திருந்தனர். ஆனால், 3 மணி நேரம் தாமதமாக வந்தார்தங்கர். அவருடன் இயக்குனர்கள் சேரன், சீமான், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் வந்தனர்.

  அவரை பத்திரிக்கை நிருபர்கள் படமெடுக்க முயன்றபோது, நிருபர்களை வெளியேற்றினால் தான் நடிகர்சங்கத்துக்குள் வருவேன் என தங்கர் கூறினார். இதையடுத்து நிருபர்கள் வெளியேற்றப்பட்டனர்.

  இதையடுத்து உள்ளே வந்த தங்கரை நோக்கி நடிகைகள் எதிர்ப்புக் கோஷமிட்டனர்.


  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேரடியாக உள்ளே போன தங்கர் அங்கு அமர்ந்திருந்த மனோரமாவைப்பார்த்ததும், நான் நடிகைகள் குறித்து அப்படி பேசியிருப்பேனா என்று கேட்டபடி அவரது காலைத் தொட்டுமன்னிப்பு கேட்டார்.

  இதற்கு மனோரமா பதில் தராமல் இருக்கவே, நீங்கள் மன்னித்தால் தான் நான் பேசுவேன் என்றார்.

  அப்போது குஷ்பு உரத்த குரலில், நீங்கள் பேசாமல் பத்திரிக்கைகள் எப்படி அப்படி எழுதுவார்கள் என்றுஆவேசமாகக் கேட்க, நான் அப்படிப் பேசவில்லை என்றார் தங்கர்.

  இதையடுத்து தங்கரைப் பேட்டி கண்ட நிருபரை உள்ளே அழைத்து வருமாறு பிற நடிகைகள் கூறவே அவர்உள்ளே சென்றார். தங்கர் நடிகைகள் குறித்து பேசியதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறினார்.

  இதையடுத்து நடிகைகள் ஆவேசமாகி தங்கர்பச்சானை நோக்கி பேசினர். அப்போது இடைமறித்த சரத்குமாரும்விஜய்காந்தும் அனைவரையும் அமைதிப்படுத்திவிட்டு நிருபர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்குமாறுகோரினர்.

  இதைத் தொடர்ந்து நிருபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேசிய தங்கர்பச்சான், நான் என்குடும்பத்துடன் (நடிகர் சங்கம்) பேசுகிறேன். நடிகைகள் பற்றி எழுதப்பட்ட பொருளில் நான் பேசவில்லை. என்வார்த்தைகள் திரிக்கப்பட்டுவிட்டன.

  எனது சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்.

  தவறு செய்த தங்கர்பச்சானுக்காக 3 மணி நேரம் காத்திருந்து அவரிடம் மன்னிப்பை வாங்கியிருக்கிறோம் என்றுகுஷ்புவும் மனோரமாவும் கோபப்பட, அவர்களை விஜய்காந்த் சமாதானப்படுத்தினார்.

  இறுதியில் தங்கர் பக்கம் திரும்பி, நீங்கள் மறுபடியும் மறுபடியும் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் ஸ்டிரைக்செய்வதைத் தவிர வேறு வழியே எங்களுக்கு இல்லை என்றார் எரிச்சலுடன்.

  அத்துடன் அனைவரும் கலைய பிரச்சனை முடிவுக்கு வந்தது.


   உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
   Enable
   x
   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   X