பாபநாசம் 2 எல்லாம் இல்லை.. முதல்ல ‘விக்ரம்’ தான்.. களத்தில் இறங்கிய கமல்.. ஸ்டன்ட் யாரு தெரியுமா?
சென்னை: தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
மாஸ்டர் படத்தை முடித்த கையோடு 'விக்ரம்' படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் படம் தொடர்பான அதிரடி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
சீக்கிரமே படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் சினிமா
தமிழ்நாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நினைத்து அரசியல் களத்தில் குதித்தார் கமல். ஒரு தொகுதியிலாவது கமல் வெற்றி பெற்று விடுவார் என நினைத்த நிலையில், கடைசியாக அதுவும் நடக்காமல் போய் விட்டது. இந்நிலையில், மீண்டும் சினிமா பக்கம் தனது கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.

லோகேஷ் படம்
மாஸ்டர் படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தனது குரு கமலின் படத்தை இயக்க உள்ளார். விக்ரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அந்த படம் தொடர்பான அப்டேட்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

பாபநாசம் 2 டாக்
நடுவில் திடீரென நடிகர் கமல்ஹாசன் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காக ஒரு மாத கால்ஷீட்டை ஒதுக்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே இந்தியன் 2 பாதியில் நின்றதை போலவே விக்ரமும் நின்று விடுமா என்கிற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காத வண்ணம் தற்போது லோகேஷ் கனகராஜ் அதிரடி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதிரடி அப்டேட்
மெட்ராஸ், கபாலி, 24, இருமுகன், காஷ்மோரா, கேஜிஎஃப், தடம், கைதி, ராதே, டாக்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குநர்களாக பணியாற்றிய அன்புஅறிவு எனும் அன்புமணி மற்றும் அறிவுமணி மாஸ்டர்கள் விக்ரம் படத்தில் இணைந்துள்ளனர் என்கிற சூப்பரான அறிவிப்பை புகைப்படத்துடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.
Recommended Video

அப்போ அனல் தெறிக்கும்
தளபதி 65 படத்திலும் அன்பு அறிவு மாஸ்டர்கள் தான். இந்நிலையில், கமலின் விக்ரம் படத்திலும் இவர்கள் சண்டை பயிற்சி இயக்குநர்களாக இணைந்துள்ள அறிவிப்பை வெளியிட்டு கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் முடிந்த பின்னர் தான் கமல் அடுத்த படத்தில் காலடி எடுத்து வைப்பார் என்பதையும் இந்த ட்வீட் தெளிவாக உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications











