ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக வில்லேஜ் பாயாக அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார்.

நெப்போலியன், ஊர்வசி, விதார்த் என பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தில் காஷ்மீரா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது என்பது பற்றிய முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

நிரூபித்துக் காட்டிய

நிரூபித்துக் காட்டிய

இசையமைப்பாளராக இளம் தலைமுறையினரின் மனதை கொள்ளையடித்த ஹிப்ஹாப் ஆதி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டுள்ளார். மியூசிக் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தன்னால் அனைவரையும் கவர முடியும் என நிரூபித்துக் காட்டிய இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

நான் சிரித்தால்

நான் சிரித்தால்

முதல் படமே அசத்தலான வெற்றியைக் கொடுத்த நிலையில் அதைத் தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களும் வெற்றிகளைப் பெற்று வர இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக படு பிஸியாக நடித்து வருகிறார்.

முதல் முறையாக

முதல் முறையாக

அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் அன்பறிவு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக வில்லேஜ் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்தவர் இதில் ஆளே டோட்டலாக மாறியுள்ளார்.

காஷ்மீரா ஹீரோயினாக

காஷ்மீரா ஹீரோயினாக

அன்பறிவு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் கோயமுத்தூரில் நடைபெற்று வந்த நிலையில் இதில் நடிகை காஷ்மீரா ஹீரோயினாக நடிக்கிறார் நெப்போலியன், ஊர்வசி, விதார்த், சங்கீதா கிரிஷ், சாய்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஏப்ரல் 14

ஏப்ரல் 14

முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்க இதன் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு அன்பறிவு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டுள்ளதை அறிந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதூகலித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X