ஆடுகளம் மாதிரி இதுவும் அமையும்.. அன்பே டயானா விமர்சனம் சொன்ன சமுத்திரகனி.. ஹிட் உறுதி?

சென்னை: ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் பாரி இளவழகன். அதுதான் அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அன்பே டயானா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் அவருடன் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சமுத்திரகனி படம் குறித்து பேசியிருக்கிறார்.

இளையராஜா இசையில் ஜமா திரைப்படத்தை கடந்த 2024ஆம் ஆண்டு இயக்கினார் பாரி இளவழகன். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எதார்த்தம் குறைக்காமல் காட்சிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி அவரும் ஹீரோவாகவே நடிக்கவும் செய்திருந்தார். சேத்தன் முக்கியமான ரோலை ஏற்க; படத்தின் கதையும், மேக்கிங்கும் தரமாக இருக்க சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் படத்திலேயே பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி மூத்த கலைஞர்களிடம் நல்ல பெயரையும் பெற்றார் பாரி.

Anbe Diana - Samuthirakani Compares Pari Elavazhagan With Vetrimaran Here
Photo Credit:

அன்பே டயானா: கண்டிப்பாக அடுத்த தலைமுறை இயக்குநர்களில் இவர் முக்கியமான ஒருவராக மாறுவார் என்பது அனைவரது கணிப்பு. அவர் இப்போது அன்பே டயானா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் அவரே ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூலை 17ஆம் தேதி படமானது தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

Also Read
Idhayam Murali Day 2 collection: இதயம் முரளி படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Idhayam Murali Day 2 collection: இதயம் முரளி படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பெரம்பூர் வாழ்வியல்: தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ ஊரின் வாழ்வியல் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரம்பூரை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது பாரி அதனைத்தான் கையில் எடுத்திருக்கிறார். ஜமாவில் திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தை காட்சிப்படுத்தியது போல்; பெரம்பூரையும் புதிதாக காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 90ஸ் சன் டிவி ஸ்டைலில் ட்ரெய்லரை உருவாக்கியிருந்தது கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

சமுத்திரகனி பேச்சு: இந்நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, "வெற்றிமாறன் எப்படி 'ஆடுகளம்' படத்தின் மூலம் மதுரையை பிரபலப்படுத்தினாரோ; அதேபோல் 'அன்பே டயானா' படத்தில் பெரம்பூரை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன். இந்தப் படத்தை பார்த்த பிறகு பலருக்கும் பெரம்பூருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வரும் என நம்புகிறேன்.

மகிழ்ச்சியாக இருக்கிறது: ஒரு படத்துக்காக அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுக்கும்போது திரையில் நன்றகா ஒர்க் அவுட் ஆகும். அன்பே டயானா அப்படிப்பட்ட ஒரு படம். பாரி இளவழகனின் துணிச்சலை நான் ரொம்ப மதிக்கிறேன். குறிப்பாக, சேத்தன் போன்ற வலிமையான நடிகரை வைத்து ஜமா போன்ற ஒரு படத்தை எடுக்க பெரிய தன்னம்பிக்கை வேண்டும். பாரி இளவழகன் இன்னும் பெரிய உயரங்களை அடைவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X