Anbe Diana Box Office: முதல் நாளில் செல்ஃப் எடுக்காத அன்பே டயானா.. இத்தனை பிரச்னைகளா?
சென்னை: ஜமா படத்தைத் தொடர்ந்து பாரி இளவழகன் மீண்டும் இயக்கி நடித்துள்ள படம் தான் அன்பே டயானா. முடிந்தவரை ஏகப்பட்ட புரமோஷன்களை செய்து முதல் நாளிலேயே தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அன்பே டயானா படத்துக்கு முதல் நாளில் எதிர்பார்த்த கூட்டமும் வரவில்லை, வசூலும் வரவில்லை என்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி அதர்வா முரளி நடித்த இதயம் முரளி படமே இன்னமும் பல தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளது.

மேலும், ஹாலிவுட் பிரியர்கள் கொண்டாடும் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படமும் இந்தியாவில் ஏகப்பட்ட திரைகளில் வெளியான நிலையில், அன்பே டயானா படத்திற்கு குறைவான திரைகளே கிடைத்தது தான் முதல் நாள் வசூலில் படம் பயங்கர அடி வாங்க காரணம் என்கின்றனர்.
சுதாரித்த மாதவன்: கட்டா குஸ்தி 2, இதயம் முரளி படங்கள் ஏற்கனவே நல்லா ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் ஜன நாயகன் படம் வியாழக்கிழமையே திரைக்கு வரும் நிலையில், ஜூலை 17 ரிலீஸ் சரியான ரிலீஸ் தேதியாக இருக்காது என முடிவெடுத்த மாதவன் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி ஜிடி நாயுடு படத்தை வெளியிட முடிவெடுத்தார். ஆனால், அன்பே டயானா படம் திட்டமிட்டபடி எந்தவொரு பின் வாங்கலும் இல்லாமல் ஜூலை 17ம் தேதி நேற்று வெளியானது. அடுத்த வாரம் விஜய் படம் வருவதால் ரசிகர்கள் பலரும் அந்த படத்துக்காக டிக்கெட் காசை சேமித்து வைத்து விடுவார்கள் என்பதால் இந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் டல் அடிக்கும் என்றே கூறுகின்றனர்.
பாசிட்டிவ் விமர்சனங்கள்: பாரி இளவழகன் பக்காவான என்டர்டெயின்மென்ட் படத்துடன் கலப்புத் திருமணம் தொடர்பான மெசேஜையும் வைத்திருந்தார். தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களும் படத்துக்கு தங்களால் முடிந்த சப்போர்ட்டை கொடுத்துள்ளனர்.
முதல் நாள் வசூல் ரொம்ப டல்: அன்பே டயானா பட்ஜெட் அதிகபட்சமாக 5 கோடிக்குள் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், முதல் நாள் வசூல் வெறும் 30 லட்சம் ரூபாய் தான் வந்துள்ளது என சாக்னிக் வெளியிட்ட தகவல் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டா குஸ்தி 2, இதயம் முரளி, நேற்று வெளியான தி ஒடிஸி என பல பெரிய படங்கள் பக்கம் ஆடியன்ஸ் சென்றதால் தான் இன்னமும் அன்பே டயானா செல்ஃப் எடுக்கவில்லை என்கின்றனர். சனி மற்றும் ஞாயிறு 2 நாட்களி வசூல் ஈட்டினால் தான் படம் பாக்ஸ் ஆபீஸில் தப்பிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications