ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க டிஜிட்டலுக்கு மாறும் ‘அன்பே சிவம்’
சென்னை: கால ஓட்டத்தில் மனிதர்களின் ரசனை மாறி வருவதால், பல பழைய படங்கள் தூசி தட்டப்பட்டு ரீமேக் ஆகி வருகிறது. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் பழைய படங்களையே டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் பண்ணும் வேலைகளும் நடந்து வருகின்றனர்.
அந்தவகையில் பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்கள் தான் டிஜிட்டல் மயமாக்கப் பட்டன. ரஜினி-கமல் சேர்ந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படமும் டிஜிட்டலில் தயாராகிறது.
தற்போது, கமல்-மாதவன் நடிப்பில் வெளிவந்த 'அன்பே சிவம்' படத்தை டிஜிட்டலில் வெளியிட ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பிளேன்ஸ், ட்ரெயின்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்.....
ஜான் ஹக்ஸ் இயக்கத்தில் 1987 ல் வெளியான பிளேன்ஸ், ட்ரெய்ன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் படத்தின் கதையை ஒட்டியதே ‘அன்பே சிவம்' படம்.

அன்பே சிவம்....
கடந்த 2003ம் ஆண்டு, ஜனவரி மாதம் ரிலீசானது இப்படம். சுந்தர் சி. இயக்கத்தில் கமல்- மாதவன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர்.

மிகச்சிறந்த படைப்பு...
கமலின் படங்களில் மிகச்சிறந்த படம் அன்பே சிவம் என சொல்பவர்கள் உண்டு. அன்புதான் அனைத்தும் என்பதை தெளிவாக உணர்த்திய படம். கமலுடன் மாதவன், கிரண் ஆகியோர் நடித்திருந்தனர்.

வியாபார ரீதியாக....
இப்படத்தில் கமல் சுனாமி பற்றி முதன்முறையாக விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே சென்றடைந்த அப்படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வில்லை.

மீண்டும் அன்பே சிவம்....
கதாநாயகன் இப்படித் தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணங்களை உடைத்து இன்றைய தமிழ் சினிமாக்கள் வெற்றி பெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில் ‘அன்பே சிவம்' படத்தை மீண்டும் வெளியிடலாம் என படத்தை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் முரளிதரன் நம்புகிறாராம்.

ரசிகர்கள் விருப்பம்....
ரசிகர்கள் பலர் தொலைபேசியிலும், கடிதத்திலும் அன்பே சிவத்தை மீண்டும் திரையிடும்படி கேட்டுக் கொள்வதாலேயே தான் இவ்வாறு முடிவு செய்திருக்கிறாராம் முரளிதரன்.

கமல் பர்மிஷன்க்காக...
டிஜிட்டலில் படத்தின் ஒலியின் தரத்தை மேம்படுத்தி வெளியிட முரளி தயாராக உள்ளபோதும், கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறாராம். காரணம் படத்தை வெளியிட்டது கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்.


Click it and Unblock the Notifications











