அன்பிற்கினியாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை : நடிகர் அருண் பாண்டியனைத் தொடர்ந்து அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இப்பொழுது படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரபல திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கீர்த்தி பாண்டியன் நடிப்பதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் இப்பொழுது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

விஜயகாந்த் திரைப்படங்களில்
90களில் அனைவரும் விரும்பும் நடிகராக இருந்து வந்த நடிகர் அருண்பாண்டியன் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் வெளுத்து கட்டி பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகரின் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். தமிழைத் தவிர கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள அருண்பாண்டியன் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார்.

படங்களையும் தயாரித்துள்ளார்
சிதம்பர ரகசியம், ஊமைவிழிகள், விலங்கு, இணைந்த கைகள் என அறிமுகமான ஆரம்பத்திலேயே தொடர் வெற்றிகளை கொடுத்த அருண்பாண்டியன் அப்போதே பல படங்களை தயாரித்திருந்தார் . குறிப்பாக விஜயகாந்த் நடித்த சில சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார். அதில் செந்தூரப்பூவே, காவியத்தலைவன், தேவன் உள்ளிட்ட படங்கள் அடங்கியிருக்க பேராண்மை,வில்லு, அங்காடித் தெரு மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

ஹெலன் தமிழ் ரீமேக்கில்
இவ்வாறு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் இப்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார். கனா பட ஹீரோ தர்ஷன் நடித்த தும்பா படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி பாண்டியன் இப்பொழுது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஹெலன் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்
படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் இப்பொழுது அதன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. "அன்பிற்கினியாள்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டிருக்க 2 செம கூலான போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அருண்பாண்டியன் அப்பா வேடத்தில் நடித்து தயாரித்தும் உள்ளார். ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications