மூன்று தலைமுறைகள் ஒன்றிணைந்த அன்பிற்கினியாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் அருண் பாண்டியன்!

சென்னை : அன்பிற்கினியாள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளி வந்து அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

புது அருண் பாண்டியனை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் இவ்வளவு நாட்கள் காத்துகொண்டு இருந்தது வீண் போகவில்லை.

மூன்று தலைமுறைகள் ஒரே படத்தில் இணைந்ததால் ஆர்வமும் ,எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

ஒரு நடுத்தர குடும்பத்தின் தந்தையாக எதார்த்தமான நடிப்புடன் மின்னுகிறார் அருண் பாண்டியன்,குடும்பத்தில் ஏற்படும் அத்தனை சந்தோஷத்தையும் ,கவலையையும் எதார்த்தமாக காட்டி ஒரு சிறந்த அப்பாவாக நிஜத்தில் மட்டும் இல்லாமல் திரையிலும் வெளிக்கொண்டு வந்துள்ளார் சிவம் என்கின்ற அருண் பாண்டியன் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரே திரை

ஒரே திரை

நிஜத்தில் அருண் பாண்டியனுக்கு மூன்று மகள்கள் ,அவரது மூன்றாவது மகள் தான் இப்படத்தின் கதாநாயகி அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்).அன்பிற்கினியாளின் சிறு வயது பெண்ணாக நடித்த குழந்தை தான் அருண் பாண்டியனின் மூத்த மகளின் குழந்தை.தனது சொந்த பேத்தியை கொஞ்சி விளையாடும் சிவம் அனைவரையும் வெகுவாக கவர்கிறார்.இப்படத்தில் மூவரின் நடிப்பும் கைதட்டல்களை அள்ளிச்செல்கிறது.

மகளின் நடிப்பு

மகளின் நடிப்பு

அன்பிற்கினியாள் செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரி. அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கடனை அடைக்க முயற்சியில் இறங்குகிறார் .கனடா சென்று நர்ஸாகப் வேலை செய்ய முயற்சி செய்கிறார்.பார்ட் டைமாக மிக பெரிய மால் ஒன்றில் இருக்கும் சிக்கன் ஹப்பில் வேலை செய்கிறார்.அங்கே காதல் மலர்கிறது.ஒவ்வொரு அசைவிலும் அப்பாவை உரித்து வைத்துள்ளார் கீர்த்தி.

காணாமல் போகும் காதலி

காணாமல் போகும் காதலி

சிக்கன் ஹப்பில் வேலையை முடித்துவிட்டு செல்லலாம் என்று நினைக்கும் இடத்தில் ஏற்படும் அசம்பாவிதம் தான் அனைவரும் பதறவைக்கிறது .ஒரு பெரிய ஏசி அறையில் மாட்டிக்கொள்கிறார்.அதுதெரியாமல் கடையை பூட்டி விட்டு முதலாளி செல்ல அங்கேயே சிக்கிக்கொள்கிறார்.அதே அறையில் எலியும் சிக்கிக்கொள்ள யார் இறக்கிறார்,யார் பிழைக்கிறார் என்பதே மீதி கதை.இந்த பிரச்சனையில் போலீஸ் விசாரணைக்கு வர காதலன் மாட்டிக்கொள்கிறார்.

சீரழியும் காதலன்

சீரழியும் காதலன்

வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரி கைகளுக்கு வர ,காதலனை கட்டிப்போட்டு அடிக்க ,அவர் மீது சந்தேகம் இல்லை என்று சொல்லும் சிவம் ,அற்புதமான நடிப்பு ,பெண்ணை தொலைத்த தந்தையின் மனதை அற்புதமாக வெளிக்காட்டுகிறார் சிவம்.போலீஸ் அதிகாரியின் நடிப்பு வேற லெவல். திமிரான பேச்சு,கெத்தான நடை என்று மிரட்டி இருக்கிறார்.

கட்டாயம் பார்க்கலாம்

கட்டாயம் பார்க்கலாம்

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசை படத்துடன் அற்புதமாக இணைகிறது.படத்தின் கிளைமாக்ஸ் அற்புதம்.கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படமாக அன்பிற்கினியாள் வரவேற்கிறாள்.தந்தை ,மகள்,காதலன் ,போலீஸ் அதிகாரி என்று அனைவரும் சிக்ஸர் அடித்துள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X