"அன்பிற்கினியாள்" டிக்கெட் விற்பனை அமோகம்!

சென்னை : நடிகை கீர்த்தி பாண்டியன் லீட் ரோலில் நடித்திருக்கும் அன்பிற்கினியாள் நாளை வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட்டுகள் படு ஜோராக விற்பனை ஆகி வருகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த வரிசையில் மலையாளப் படம் ஹெலன் முக்கிய பங்கை வகிக்க உள்ளது.

அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் அன்பிற்கினியாள் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் அளவு இருக்கின்ற நிலையில் அதன் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மிரட்டல் நாயகனாக

மிரட்டல் நாயகனாக

நிஜ வாழ்க்கையில் தந்தை மகள் ஆக இருக்கும் பலரையும் திரைப்படங்களில் அதேபோல தந்தை மகளாக பார்க்க வேண்டும் என்ற ஆசை பெருமளவு ரசிகர்களுக்கு இருக்கின்ற நிலையில் 90களில் மிரட்டல் நாயகனாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகர் அருண்பாண்டியன் நீண்ட காலமாக நடிக்காமல் திரைப்படங்களை தயாரித்து மட்டுமே வந்தார்.

கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்

கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்

அங்காடித்தெரு,வில்லு, ஜூங்கா உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த நடிகர் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியனை தும்பா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அப்பாவாகவும் மகளாகவும்

அப்பாவாகவும் மகளாகவும்

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனின் இரண்டாவது திரைப்படத்தில் அருண் பாண்டியனும் இணைந்து நடிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் மலையாள திரைப்படமான ஹெலன் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட அதில் அருண்பாண்டியன் அப்பாவாகவும் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்துள்ளனர் .

டிக்கெட் விற்பனை அமோகமாக

டிக்கெட் விற்பனை அமோகமாக

அன்பிற்கினியாள் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் என அனைத்தும் வெளியாகி களைகட்டியது. இந்த நிலையில் மார்ச் 5-ஆம் தேதி நாளை ரிலீஸாக உள்ள நிலையில் திரையரங்குகளில் இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் படு ஆர்வமாக டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் எதிர்பார்த்ததை விடவும் மிக விரைவாகவே விற்று தீர்ந்து வருகிறது என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் சொல்லப்படும் நிலையில் அன்பிற்கினியாள் மகள் மற்றும் தந்தைக்கு இடையேயான உறவைப் பற்றி சொல்வதாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X