'அன்பு அண்ணன்' ரொம்ப நல்லவர், அவரை பத்தி மத்தவங்க சொல்வது எல்லாம் சுத்த பொய்: சுந்தர் சி.
Recommended Video

சென்னை: அன்பு அண்ணன் நல்லவர், அவரை பற்றி மத்தவங்க சொல்வது எல்லாம் சுத்த பொய் என இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. தெரவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் அன்புச்செழியன் குறித்து இயக்குனர் சுந்தர் சி. கூறியிருப்பதாவது,

பணம்
கடந்த 8 ஆண்டுகளாக என் தயாரிப்புகளுக்கு எல்லாம் அன்பு அண்ணனிடம் தான் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வருகிற நியூஸ் எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அதை எழுது வாங்கிவிட்டார், இதை எழுதி வாங்கிவிட்டார்னு.

கலகலப்பு 2
உண்மையை சொல்லப் போனால் என்கிட்ட அது மாதிரி எதுவுமே கிடையாது. நான் பண்ணிக் கொண்டிருக்கிற கலகலப்பு 2க்கு கூட அன்பு அண்ணன் தான் பைனான்ஸ் பண்ணியிருக்கிறார்.

வடிகட்டிய பொய்
செக், இந்த படத்திற்காக இவ்வளவு பணம் வாங்கிக் கொண்டோமே தவிர மத்தவங்க சொல்கிற மாதிரி வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிட்டாரு, பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிட்டார்னு சொல்வது எல்லாம் சுத்தமாக வடிகட்டிய பொய். என்னுடைய அனுபவத்தில் அது போன்று எதுவும் நடக்கவில்லை.

பரவாயில்லை
அதே மாதிரி நான் பணம் கொடுக்க தாமதம் ஆகியிருக்கிறது. எனக்கே மனசாட்சி உருத்தும். அண்ணன் ஒரு வாரம் மிஸ்ஸாகிறது என்றால் கூட பரவாயில்லை வரும்போது அனுப்புங்க என்பார்.

பைனான்ஸியர்கள்
அதே மாதிரி சினிமா ரிலீஸுக்கு முன்னாடி எல்லா பைனான்ஸியரும் கழுத்தில் கை வைப்பாங்க. பணத்தை கொடுத்துவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்யணும் என்பார்கள். ஆனால் அன்பு அண்ணன் அந்த மாதிரி நெருக்கடி கொடுத்ததே கிடையாது. சினிமா கஷ்டம் தெரிந்த ஒரு பைனான்ஸியர் அவர்.

நடுராத்திரி
இத்தனை வருடங்களில் அவருடன் ஒரு சின்ன மனக்கசப்பு கூட ஏற்பட்டது இல்லை. பணம் வேண்டும் என்றால் நடுராத்திரியில் கூட அவருக்கு போன் செய்து தாராளமாக கேட்கலாம் என்கிறார் சுந்தர் சி.


Click it and Unblock the Notifications











