அன்புச்செழியன் மிரட்டவில்லை, ரொம்ப நைஸ், ஸ்வீட்டான நபர்: சொல்வது தேவயானி
Recommended Video

சென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியன் ரொம்ப நல்லவர், ஸ்வீட்டானவர், மரியாதையானவர் என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணமான பைனான்ஸியர் அன்புச்செழியன் ஒரு காலத்தில் நடிகை தேவயானியை பணத்திற்காக மிரட்டியதாக பேசப்பட்டது.
இந்நிலையில் அன்புச்செழியன் பற்றி தேவயானி பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தேவயானி கூறியிருப்பதாவது,

ஸ்வீட்
கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் அன்புவிடம் கொடுத்துவிட்டோம். என்னை பொறுத்த வரைக்கும் எப்ப அவரை சந்தித்தாலும் ரொம்ப நல்லவர், ரொம்ப மரியாதையுடன் ஸ்வீட்டாக பேசுவார் பழகுவார்.

அன்பு
நான் அவரை இரண்டு முறை தான் சந்தித்துள்ளேன். நம்ம படம் முடிச்ச பிறகு மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் டைம். நாங்கள் எல்லோரும் தயாரிப்பாளர்களாக அவரிடம் வாக்கு கேட்க சென்றபோது பார்த்திருக்கிறேன்.

மரியாதை
அவர் எங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வருவதோ தொல்லை கொடுப்பதோ இல்லை. ரொம்ப நைஸ், ஸ்வீட்டான நபர். எப்பொழுதுமே அப்படித் தான் பார்த்திருக்கிறோம்.

மருத்துவர்
அவருடைய மகளுக்கு கூட தோல் அலர்ஜி இருக்கும்போது என் கணவரிடம் தான் டாக்டரை பரிந்துரைக்குமாறு கேட்டார். என் கணவர் தான் ஒரு நல்ல மருத்துவரை பரிந்துரை செய்தார். அவர் ரொம்ப நல்ல நைஸ், ஸ்வீட் பர்சன் என்றார் தேவயானி.


Click it and Unblock the Notifications











