”தம்மாத்தூண்டு ஆங்கர் தாண்டா அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது”.. வட சென்னை புரமோ!
வட சென்னை படத்தின் மற்றுமொரு புரமோ வெளியாகியுள்ளது
சென்னை: வட சென்னை திரைப்படத்தின் அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.
வெற்றிமாறனுடன் தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. இப்படத்தின் மற்றொரு புரமோ இன்று மாலை வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி, 'அன்பு த ஆங்கர்' என்ற புரமோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு வெளியான மாடில நிக்குற மான்குட்டி பாடல் புரமோவிற்கு நேர்மாறாக தற்போது வெளியாகியுள்ள 'அன்பு த ஆங்கர்' புரமோ உள்ளது.
புதுப்பேட்டை கொக்கி குமார் போல தாடிவைத்த தனுஷ், அதிரடியில் இறங்குகிறார். அமீர், கிஷோர் கடலில் படகில் வருவது, சமுத்திரக்கணி மார்பில் தழும்போடு காட்சியளிப்பது என மிரட்டுகிறார்கள். அந்த தழும்புக்கு ஒரு பிளாஷ்பேக் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
"தம்மாத்தூண்டு இருந்துகிட்டு என்ன மிரட்டுறியா" என கேட்கும்போது, "தம்மாத்தூண்டு ஆங்கர் தாண்டா அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது" என கத்தியை எடுக்கிறார் தனுஷ்.
படத்தில் இருக்கும் சாதுவான தனுஷையும் லவ்வர் பாயையும் காட்ட ஒரு புரமோ, அதிரடி ஆக்ஷனில் இரங்கும் தனுஷைக் காட்ட மற்றொரு புரமோ என வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.
அன்பு வரும் காட்சிகளில் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை வலுவாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











