தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ராமதாஸின் பேத்தி.. அட டைரக்டர் இவரா?

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சௌமியா அன்புமணி தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தி என்ற பெருமையுடன் இவர் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் அடுத்ததாக திரைத்துறையில் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவரது படத்தை உறுமீன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் டைரக்டர் வருகிறார்.

திருமணமான சங்கமித்ரா லோக்சபா தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அவரது மகள்களே. அன்புமணி ராமதாஸ் -சௌமியா தம்பதிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா மற்றும் சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே லோக்சபா தேர்தலில் தன்னுடைய அம்மாவிற்காக பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்திருந்தனர்.

sangamitra alangu movie

அன்புமணியின் மகள் சம்யுக்தா: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்தா மற்றும் சஞ்சுத்ரா. கடந்த லோக்சபா தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் அவர் தோல்வியுற்றார். இந்த தேர்தலில் சௌமியாவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் அனைவரும் செயல்பட்டனர். குறிப்பாக அவரது மூன்று மகள்களும் அங்கு சிறப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அத்தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்தனர். தன்னுடைய அம்மாவுடன் தருமபுரியிலேயே தங்கியிருந்து இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.

தேர்தலில் சிறப்பான பிரசாரம்: குறிப்பாக சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா இருவரும் தன்னுடைய குழந்தைகளுடன் அங்கேயே தங்கியிருந்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். அத்தொகுதி மக்களிடம் எளிமையான முறையில் இவர்கள் மேற்கொண்ட பிரசாரம் அனைத்தை தரப்பினரையும் சிறப்பாக கவர்ந்தது. இவர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவார்களா என்று மக்கள் கேள்வி கேட்கும்வகையில் இவர்கள் அத்தொகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இந்நிலையில் தற்போது அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். டிஜி பிலிம்ஸ் மற்றும் மேக்னாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

தயாரிப்பாளரான சம்யுக்தா: தமிழக கேரள எல்லையையொட்டி நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்திற்கு அலங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்கள் மூலம் கோலிவுட்டில் கவனம் பெற்ற இயக்குநர் எஸ்பி சக்திவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். கோலி சோடா 2, விக்ரம் படங்களை தொடர்ந்து கோலிவுட்டில் இவரது அடுத்தப்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

உண்மை சம்பவங்களின் கதை: மலையாளத்தில் சிறப்பான நடிகராகவும் கதாசிரியராகவும் உள்ள செம்பன் வினோத் ஜோஸ், அங்கமளி டைரீஸ் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதனிடையே அலங்கு படத்தில் இவர் இணைந்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் செம்பன் வினோத்துடன் காளி வெங்கட், குணாநிதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். திரில்லர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்த நாய் இனமும் நடிக்கவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X