Draupathi 2 Review: 'திரௌபதி 2' படம் எப்படி இருக்கு.. அன்புமணியின் மனைவி சௌமியா சொன்னதை கேளுங்க!
சென்னை: 'திரௌபதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரௌபதி 2வது பாகத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். இன்று படம் தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.
திரௌபதி முதல் படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில், ரிச்சர்ட் ரிஷி, சீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க மோகன் ஜி, திரௌபதி 2 படத்தை எடுத்துள்ளார். பான் இந்திய திரைப்படமாக இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி உள்ளது. இப்படத்தில், ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

திரௌபதி 2: இப்படம் இன்று தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், அன்புமணியின் மனைவி சௌமியா படத்தை பார்த்துவிட்டு பாராட்டி பேசி உள்ளார். அதில், திரௌபதி படத்தை சிறப்பு திரையிடலில் நானும் சிலரும் பார்த்தோம். இதனை திரைப்படம் என்று சொல்வதை விட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நல்ல காவியம் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால், திருவண்ணாமலையை வைத்து தமிழ் சினிமாவில் இதுவரை கதைக்களம் வந்தது கிடையாது அதற்கு முதலில் என் வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
சௌமியா அன்புமணி: இதுபோன்ற வீரமான கதைகளை நாம் வரலாற்று புத்தகத்தில் படித்து இருப்போம். குழந்தைகளின் பாட புத்தகத்தில் கூட இவர்களை பற்றி எந்தவிதமான வரலாற்று குறிப்புகளும் இல்லை. ஆனால், சம்மூரராயர்கள், கடவராயர் போன்ற சிற்றரசர்கள் தமிழ் நாட்டில் இருந்து இருக்கிறார்கள் அவர்களின் வீரத்தை இந்த படம் பேசுகிறது. முகலாய பேரரசு தமிழகத்தில் வர முடியாததற்கு முக்கிய காரணமான இரண்டு தமிழ் மன்னர் தான். பாடபுத்தகத்தில் இடம்பெறாத அந்த தமிழ் மன்னர்களான வீர வல்லாளன், காடவராயர்கள் வீரத்தை 'திரௌபதி 2' பதிவு செய்துள்ளது. வேறு எங்குமே பதிவு செய்யப்படாத இந்த மன்னர்களின் வீரத்தை பதிவு செய்த இயக்குநர் மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வீரமங்கை: அதே போல மோகன் ஜியின் அவர்களின் திரைப்படங்களில் எப்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். நேர்மையும், துணிச்சலும் கொண்ட ஒரு வீர மங்கையாக பெண்களை காண்பிப்பார். அதே தொடர்ச்சி 'திரௌபதி 2' படத்திலும் ஒரு நேர்மையான ஒரு ராணி இருக்கிறது. வீரம் என்பது கலை தான். வீரத்தையும் நேர்மையும் கொண்ட பெண் தான் திரௌபதி. நெருப்பில் இருந்து பிறந்த திரௌபதி, எப்படி நெருப்பாகவே வாழ்ந்து மறைந்தார் என்பதே இந்த திரௌபதி 2. இந்த கதையை அழகாக நேர்த்தியாக வரலாற்று பின்னணியில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. அதை விட இந்த படத்தில் நடித்த அனைவருதும் தங்களது கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று சௌமியா அன்புமணி படத்தை வெகுவாக பாராட்டினார்.


Click it and Unblock the Notifications