கூல் சுரேஷ் மாலை போட்டாரே.. தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதிக்கு அடுத்து வந்த சோதனை.. செம டீலிங்!
சென்னை: இந்த மே மாதம் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்துள்ள படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கின்றன. நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் மே 16ம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் சந்தானத்துக்கு போட்டியாக சூரியின் மாமன் படமும் வெளியாகிறது.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் முன்னதாக ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்துள்ள அம்பி படம் வரும் 9ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இதனை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ரகுபதியின் ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக பயில்வான் ரங்கநாதன் மற்றும் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் இருவரிடையே பத்திரிகையாளர் சந்திப்பில் ஏற்பட்ட வாக்குவாதம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தொகுப்பாளினி சேலை அணிந்து வந்த நிலையில், அவரது ஆடை குறித்து டபுள் மீனிங்கில் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ரோபோ சங்கரின் அம்பி: பாஸர் ஜெ. எல்வின் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாக அம்பி எனும் படத்தின் மூலம் ரோபோ சங்கர் களமிறங்குகிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ரகுபதியின் ஆடை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சலசலப்பை ஏற்படுத்தியது.
கூல் சுரேஷ் மாலை போட்டாரே: தொகுப்பாளினியாகவும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட சில படங்களில் நடிகையாகவும் நடித்து வரும் ஐஸ்வர்யா ரகுபதி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே கூல் சுரேஷ் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிக்கு அவர் திடீரென மாலை போட அதை கழட்டி தூக்கிப்போட்டு ஐஸ்வர்யா ரகுபதி முறைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், கூல் சுரேஷ் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்நிலையில், அவருக்குத்தான் மீண்டும் பிரச்னை கிளம்பியுள்ளது.

வெயிலுக்கு ஏத்த ஆடையா?: சேலை அணிந்திருந்த ஐஸ்வர்யா ரகுபதி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார். அவரது ஆடையை கிண்டல் பண்ணும் விதமாக பத்திரிகையாளர் ஒருவர் நீங்க அணிந்திருப்பது வெயிலுக்கு இதமான ஆடையா? என்கிற கேள்வியை எழுப்ப, படத்தின் டாப்பிக்குக்கு சம்பந்தமில்லாத கேள்வியை ஏன் கேக்குறீங்க என்றார். மேலும், உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என கோபப்படாமல் அந்த சூழலை அமைதியான முறையிலேயே சமாளித்தார்.
செமையா டீல் பண்ண ஐஸ்வர்யா ரகுபதி: இமான் அண்ணாச்சி ஆமாம்னு சொல்லும்மா ஏன் பயப்படுற என கேட்க, அவரது கேள்விக்கு எனக்கு தோன்றுவதை சொல்லிவிட முடியும். ஆனால், மீடியா, கேமராலாம் இருப்பதனால் அமைதியாக கடந்து செல்கிறேன் என்றார். படத்தை பற்றி பேசும் போது, வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஐஸ்வர்யா ரகுபதி கொடுத்த நிலையில் தான் நான் அப்படியொரு கேள்வியை எழுப்பினேன் என பத்திரிகையாளரும் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் ஐஸ்வர்யா ரகுபதிக்கு ஆதரவு அளித்து அந்த பத்திரிகையாளரை கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











