அதிர்ச்சி.. பிரபல நடிகர்.. நிகழ்ச்சி தொகுப்பார்.. இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரர் கொரோனாவுக்கு பலி!

சென்னை: பிரபல இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரரான நடிகர் குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவருக்கு வயது 44.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக சற்று குறைந்துள்ளது.

ஆனால் உயிரிழப்புகள் குறைந்தப்பாடில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 468 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

கொரோனா தொற்றுக்கு சினிமா பிரபலங்களும் தப்பவில்லை. கடந்த 2 மாதங்களாக தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

ராஜுமுருகனின் சகோதரர்

ராஜுமுருகனின் சகோதரர்

இந்நிலையில் பிரபல இயக்குநரான ராஜு முருகனின் சகோதரரும் நடிகருமான குரு ராஜேந்திரன் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் ராஜு முருகன்.

வசனகர்த்தா

வசனகர்த்தா

தொடர்ந்து ஜோக்கர் மற்றும் ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் தோழா, மெஹந்தி சர்க்கஸ், வர்மா ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார் ராஜு முருகன். இவரது சகோதரர் குரு ராஜேந்திரன்.

தொண்டு செய்பவர்கள்

தொண்டு செய்பவர்கள்

இவர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழகம் முழுவதும் பயணித்து தொண்டு செய்யும் மக்களை வெளிக் கொண்டு வந்தவர் இந்த குரு ராஜேந்திரன்.

படங்களில் நடித்துள்ளார்

படங்களில் நடித்துள்ளார்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய குரு ராஜேந்திரன் கடைசியாக நியூஸ் 18 தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கற்றது தமிழ், மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

நேற்றிரவு மரணம்

நேற்றிரவு மரணம்

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட குரு ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த குரு ராஜேந்திரன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலரும் இரங்கல்

பலரும் இரங்கல்

அவரது மறைவு ஊடகத்தினர் மத்தியிலும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X