Divyadarshini: ஒரு நிமிஷத்துல சிம்ரன்னு நெனச்சிட்டோம்.. டிடியின் அட்டகாசமான வீடியோ!

சென்னை: சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல, சின்னத்திரையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களுக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திவ்யதர்ஷினி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளர் ஆனார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கினார். விசில் படத்தில் டிடி ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக தொகுத்து வழங்கினார். இதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் டிடி. அந்த நிகழ்ச்சியில் கிடைத்த அங்கீகாரத்தை தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

divyadarshini dd

திவ்யதர்ஷினி: இவர், கமல் ஹாசனின் நள தமயந்தி படத்தில் பிராமண பெண்ணாக நடித்தார், இது தமிழ் மக்களின் விரும்பிய படமாக மாறியது. இதையடுத்து,ஒரு சில திரைப்படங்களில் சிறிய பாத்திரங்கள் மற்றும் ரூபா சுவாமிநாதனின் ஒரு சுயாதீன ஆங்கில படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். அதன் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பி பல முன்னணி நடிகைகளை பேட்டி எடுத்தார்.

divyadarshini dd

காலில் ஆப்ரேஷன்: சின்னத்திரையில் பிஸியாக இருந்த டிடி திடீரென சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார். இதற்கு கால் வலி தான் காரணம் கூறப்பட்டது. இதுபற்றி யூடியூப் சேனலில் பேசிய டிடி, எனக்கு முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக நான் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஆனால், அந்த அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக தவறாகி விட்டதால் என்னால் நடக்க முடியவில்லை என்றார்.

divyadarshini dd

சோதனையான காலம்: கால் வலியால் மூன்று முறை ஆப்ரேஷன் செய்த டிடி, நான்காவது முறையாக கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் காலில் ஆப்ரேஷன் செய்து கொண்டார். அந்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்து, கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது எனக்கு நடக்கும் 4வது அறுவை சிகிச்சை. எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக பகிர்ந்து இருந்தார்.

divyadarshini dd

அழகான வீடியோ: இதையடுத்து, கால் வலியில் இருந்து மீண்டு வந்த டிடி, வேட்டையன் இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். அதைத்தொடர்ந்து இப்போது இன்ஸ்டாகிராமில், கோல்டன் நிற பாவாடை தாவணியில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவிற்கு தகுந்தர் போல மெலோடி பாடல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X