இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல தொகுப்பாளினி டிடி? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி தனது பிறந்தநாளை இரண்டாவது காதலருடன் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி வட இந்திய பிரபலங்களுக்கும் அத்துப்படியானவர்.
சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் டிடி, முழு நேர பணியாக தொகுப்பாளர் பணியை மட்டுமே கொண்டுள்ளார்.

பிக்பாஸ் கொண்டாட்டம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள டிடி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். லாக்டவுன் நேரத்தில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காத டிடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் டிடி நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் டிடிக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

நண்பர்கள் பார்ட்டி
இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு தனது நண்பர்கள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்ததையும் அந்த போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் டிடி.

கட்டி அணைத்து..
தனது பேபி டார்லிங்ஸ் என தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை போட்டு நன்றி கூறியுள்ளார் டிடி. மேலும் விஜய் டிவியின் புரோகிராம் ஹெட்டை இறுக்கி அணைத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் டிடி.

காதல் திருமணம்
இந்நிலையில் டிடியின் பிறந்தநாள் பார்ட்டியில் அவரது இரண்டாவது காதலரும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சட்டப்படி விவாகரத்து
திருமணத்திற்கு பிறகும் சினிமா சின்னத்திரை என தொடர்ந்து வந்தார் டிடி. ஆனால் அதற்கு கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர்.

விரைவில் திருமணம்?
இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அது வதந்தி என்று தகவல் பரவியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











