இன்ஸ்டாவில் 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. கேக் வெட்டி கொண்டாடிய டிடி.. குவியும் வாழ்த்து!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
Recommended Video
விஜய் டிவியின் நீண்ட கால விஜேக்களில் ஒருவர் டிடி. ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.
தொகுப்பாளர், நடுவராக மட்டுமின்றி நடிகையாகவும் உள்ளார். பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

பெரும் ரசிகர் பட்டாளம்
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலகலப்பாக கொண்டு செல்லும் டிடிக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலருமே டிடிக்கு ரசிகர்களாக உள்ளனர்.

ஜாலி ட்ரிப்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிடி, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் சென்றது, மகளிர் தின வாழ்த்து போன்ற வீடியோக்களை வெளியிட்டார்.

2 மில்லியன் ஃபாலோயர்ஸ்
அந்த வீடியோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் டிடி தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது டிடியை இன்ஸ்டாவில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாகியுள்ளது.

கேக் வெட்டி உற்சாகம்
இதனை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளார் டிடி. மேலும் 2 மில்லியன் அன்புக்கு பெரிய நன்றி.. என் இதயம் நன்றியுணர்வோடு வீங்குகிறது.. இந்த ஆதரவுக்கு நன்றி மட்டும் போதுமானது அல்ல என கூறியுள்ளார்.

நீங்கள் தகுதியானவர்
இதனை பார்த்த ரசிகர்கள் டிடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலரும் இதற்கும் இதற்கு மேல் பெறவும் நீங்கள் தகுதியானவர்தான் என்றும் கூறி வருகின்றனர். மேலும் எப்போதும் பாஸிட்டிவிட்டியை பரவ விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











