ரொம்ப யோசிச்சேன்.. பயந்தேன்.. டபுள் மாஸ்க்குடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜய் டிவி டிடி!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி. தொலைக்காட்சி தொகுப்பாளராக மட்டுமின்றி, விருது விழா உட்பட பல முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளராக மட்டுமின்றி நடிகையாகவும் வலம் வருகிறார் டிடி. பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகருடன் நெருக்கம்
அவ்வப்போது சர்ச்சைகளிலும் டிடியின் பெயர் அடிபட்டு வருகிறது. குறிப்பாக முன்னணி நடிகர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலையில் கவனம்
அதுதான் அவரது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத டிடி தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

பிகினி போட்டோ
சோஷியல் மீடியாவில் ஆக்வாக உள்ள டிடி அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற டிடி அங்கு பிகினியில் எடுத்த போட்டோவையும் வீடியோவையும் ஷேர் செய்து வருகிறார்.

தடுப்பூசி போட்ட டிடி
டிடி என்ன போட்டோ வீடியோ ஷேர் செய்தாலும் அது பெரியளவில் வைரலாவது வழக்கம். இந்நிலையில் டிடி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவும் வழக்கம் போல வைரலாகி வருகிறது.

ரொம்ப பயந்தேன்
தனது போட்டோவை ஷேர் செய்துள்ள டிடி பதிவிட்டிருப்பதாவது, ரொம்ப யோசிச்சேன், பயந்தேன், ஏன்னா தானாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்துகள் கூட எடுக்குறேன். அதனால் என் மருத்துவரிடம் கேட்டேன். அவரு சொன்னாரு மத்த மருந்துகளை நிறுத்துங்கள், இப்போதைக்கு தடுப்பூசிதான் முக்கியம்.

கோவிஷீல்டு போட்டுக்கிட்டேன்
அது மட்டும்தான் நம்மாள கொரோனாவில் இருந்து காப்பாத்த முடியும்னு. நம்மள நம்ம குழந்தைங்கள மூன்றவாது அலையில் இருந்து காப்பாத்த முடியும். அதனால கோவிஷீல்டு போட்டுக்கிட்டேன். என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைத்த டாக்டர் கார்த்திகா கார்த்திக்கிற்கு பெரிய நன்றி.

அரசு சொல்வதை கேளுங்க
நீங்களும் உங்கள் மருத்துவர்கிட்ட மட்டும் கேட்டு முடிவு பண்ணுங்க. நான் ரிஜிஸ்டர் செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நம் மாநில அரசும் உங்கள் மருத்துவரும் சொல்வதை கேளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஊசி போட்டுவிட்ட நர்ஸ் உட்பட அனைவருக்கும் டிடி நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











