போதையில் ராணாவுடன் ஆட்டம் போட்டாரா பிரபல டிவி தொகுப்பாளினி? தீயாய் பரவும் போட்டோஸ்!

Recommended Video

DD dancing with Rana in star hotel | Anchor DD | Rana Duggubati

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. திவ்யதர்ஷினியான இவர் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

கலகலப்பான பேச்சு, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் திறமை, கூடவே க்யூட்டாகவும் இருப்பதால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிடித்த டிவி தொகுப்பாளினி யார் என்றால் பலருக்கும் சட்டென வரும் பெயர் டிடிதான்.

படங்களிலும்..

படங்களிலும்..

அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் டிடி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி விசில், நளதமயந்தி, பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

பெரும் வெற்றி

பெரும் வெற்றி

இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சி பெரும் பிரபலம். பல சினிமா பிரபலங்களையும் இதன்மூலம் பேட்டிக் கண்டிருக்கிறார் டிடி. அந்த நிகழ்ச்சியும் டிடியை வேறு மாதிரி காட்டி பெரும் வெற்றி பெற்றது.

திருமணம்

திருமணம்

கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு டிவி நிகழ்ச்சிகளிலும் இரவு விருந்துகளிலும் பங்கேற்க கூடாது என கணவர் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.

விவாகரத்து

விவாகரத்து

இதனால் டிடிக்கும் அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தனியாக வசித்து வந்த அவர்கள் பின்னர் பிரிய விரும்பி, இருவரும் சட்டப்படி பரஸ்பரமாக விவாகரத்து பெற்றனர்.

மதுபோதையில் ஆட்டம்

தொடர்ந்து நைட் பார்ட்டியில் பங்கேற்கும் டிடி, மதுபோதையில் ஆட்டம் போடுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஹைதராபாத் சென்றுள்ள டிடி, தெலுங்கில் பிரபல நடிகரான ராணா டகுபதியுடன் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் ஆட்டம் போட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.

விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் டிடி, நடிகர் ராணாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இப்போது இவரா என கேட்டு அவரை விளாசி வருகின்றனர்.

காதல் பிரேக்கப்

காதல் பிரேக்கப்

நடிகர் ராணாவும் நடிகை திரிஷாவும் காதலித்து வந்தனர். ஆனால் அந்த காதல் பிரேக்கப் ஆக நடிகை திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அந்த திருமணம் நடைபெறவில்லை.

பிரபலமான ராணா

பிரபலமான ராணா

தொடர்ந்து நடிகர் ராணாவும் நடிகை திரிஷாவும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ராணா பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடித்து நாடு முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X