Don't Miss!
- News
"சாம்பாரில்" கொட்டி கிடக்கும் நன்மைகள்.. பெருங்குடல் கேன்சரையே தடுக்குமாம்! வியக்கும் அமெரிக்கா
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுந்தர் சியின் காபி வித் காதல் ட்ரெயிலர் லான்ச்.. வீல் சேரில் வந்த டிடி.. ரசிகர்கள் கவலை!
சென்னை : சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல். தனக்கேயுரிய காமெடி ஜானரில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி.
இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் யோகிபாபு, டிடி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிடவுள்ளது. அக்டோபர் 7ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஷூட்டிங்கில்
ரிஸ்க்
எடுத்த
சூர்யா…
வணங்கான்
ஸ்கிரிப்ட்டை
ஒரேடியாக
மாற்றிய
பாலா…

காபி வித் காதல் படம்
நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், மாளவிகா ஷர்மா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட நட்சத்தர பட்டாளங்களே நடித்துள்ள படம் காபி வித் காதல். படத்தை சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில், படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

காமெடி களம்
இந்தப் படத்தை தனக்கே உரிய காமெடி களத்தில் இயக்கியுள்ளார் சுந்தர் சி. அதற்கேற்ப நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளது. படத்தில் பிரபல ஆங்கரும் நடிகையுமான டிடி எனப்படும் திவ்யதர்ஷனியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

சிறப்பான ரீ-மிக்ஸ் பாடல்
யுவன் சங்கர் ராஜா இசையில் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், ரம் பம் பம் பாடலை ரீ-மிக்ஸ் செய்து வெளியிட்டனர். அந்தப் பாடலும் சிறப்பான கவனத்தை பெற்றது. இந்நிலையில், இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

ட்ரெயிலர் வெளியீட்டு விழா
இதில் படக்குழுவினர் ஜெய், ஜீவா, குஷ்பூ, ரைசா வில்சன் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் சிவப்பு நிற உடையிலும் ஆண்கள் அனைவரும் கருப்பு நிற உடையிலும் கலந்துக் கொண்டனர். இந்தப் படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீல் சேரில் வந்த டிடி
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளர் டிடியும் கலந்துக் கொண்டார். அவரது காலில் பிரச்சினை உள்ளதால் அவர் வீல் சேரில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீல் சேரில் இருந்த அவரை பின்புறம் இருந்து ஒருவர் தள்ளிக் கொண்டு வந்தார். இதையடுத்து டிடிக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.