விழா மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அணைத்து நச்சென இச்சு கொடுத்த டிடி.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி விருது விழா ஒன்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு முத்தம் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சிறு வயது முதலே சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் கலக்கி வருகிறார்.
ஏற்கனவே திருமணமான டிடி, சில மாதங்களிலேயே கணவரை பிரிந்தார். பின்னர் விவாகரத்து பெற்ற டிடி தொடர்ந்து ஆங்கரிங், நடிப்பு என இருந்து வருகிறார்.

மாலத்தீவுக்கு சுற்றுலா
36 வயதான போதும் கொஞ்சமும் இளமை குறையாமல் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார் டிடி. சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற டிடி அங்கு எடுத்த வீடியோக்களையும் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்.

குமரனுக்கு முத்தம்
இதேபோல் மகளிர் தினத்தை முன்னிட்டும் வித்தியாசமாக வாழ்த்து கூறினார் டிடி. இந்நிலையில் டிடி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு முத்தம் கொடுத்த போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அண்மையில் தனியார் மீடியா நிறுவனத்தின் விருது விழா நடைபெற்றது.

குமரனுக்கு விருது
இதில் விஜய் டிவி தொகுப்பாளினியான டிடியும் பங்கேற்றார். அவருக்கு விருது விழாவில் விருது வழங்கப்பட்டது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனுக்கும் விருது வழங்கப்பட்டது.

முத்தம் கொடுத்த டிடி
அந்த விருதை டிடிதான் குமரனுக்கு வழங்கினார். குமரனுக்கு விருது வழங்கிய கையோடு அவரை அணைத்து முத்தமும் கொடுத்தார் டிடி. டிடி குமரனுக்கு முத்தம் கொடுக்கும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விரைவில் திருமணம்?
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் டிடி இரண்டாவதாக ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் ஆனால் அது வெறும் வதந்தி என்றும் பின்னர் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











