இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் தொகுப்பாளினி டிடி? மாப்பிள்ளை இவரா.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷ்னி. டிடி என்றழைக்கப்படுகிறார்.
விஜய் டிவி புராடெக்ட்டான இவர், உள்ளூர் பிரபலங்கள் முதல் வட கான் நடிகர்கள் வரை பலரையும் நேர்காணல் செய்துவிட்டார்.

ஏராளமான ரசிகர்கள்
பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் டிடி. விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார். இவரது கலகலப்பான பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

விவாகரத்து..
தொகுப்பாளராக மட்டுமின்றி நடிகையாகவும் உள்ளார் டிடி. பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் டிடி. அவரது திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது குறித்து பல்வேறு பேச்சுகள் இன்னமும் பரவிய வண்ணம் உள்ளன.

பிரபல நடிகருடன் நெருக்கம்
அதனை தொடர்ந்த இரவு பார்ட்டியில் அவர் பங்கேற்ற போட்டோக்களும் கசிந்து சர்ச்சையானது. ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் அவர் பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதவி இயக்குநர் திருமணம்
இருப்பினும் அவரது க்யூட்னஸ் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார். டிடி தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான உதவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

சட்டை செய்யாத டிடி
ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் செய்தார். இரவு நேர பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் அவர் பங்கேற்றதுதான் விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இருப்பினும் அதையெல்லாம் சட்டை செய்யாத டிடி தனது வேலையில் கவனமாக உள்ளார்.

இரண்டாவது திருமணம்?
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்
ஆனால் இதுகுறித்து டிடி தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் இந்த தகவல் உண்மைதானா அல்லது வதந்தியா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக டிடி அல்லது சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











