இதுதான் நான்.. மேக்கப் இல்லாமல் டிடியே வெளியிட்ட ஃபோட்டோ.. ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்
சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஃபேமஸான நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அவரைத் தொடர்ந்து டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருந்த சூழலில் டிடி தொகுத்து வழங்கியதை அடுத்து மேலும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.
விலகிய டிடி: காஃபி வித் டிடி நிகழ்ச்சியை மட்டுமின்றி பிற நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. இந்தச் சூழலில் அவர் விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இருந்தாலும் திரைப்பட விழாக்களை அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் டிடி: திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் தோன்றக்கூடியவர். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி மற்றும் இன்னும் சில படங்களில் தன்னுடைய சிறு வயதில் தோன்றினார் அவர். கடைசியாக சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தில் நடித்தவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். படம் இன்னும் வெளியாகவில்லை
திருமணம் டூ பிரிவு: திவ்யதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் குவிந்தனர். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. எதற்காக இரண்டு பேரும் விவாகரத்து செய்தார்கள் என்பது தெரியவில்லை. விவாகரத்துக்கு பிறகு டிடி சிங்கிளாகவே இருந்துவருகிறார்.
டிடி பகிர்ந்த ஃபோட்டோ: டிடி சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர். தான் வெளிநாடு சென்றாலோ, இல்லை ஏதேனும் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தாலோ அதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். அந்தவகையில் அவர் இப்போது தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'இதுதான் நான். என்னை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கிறீர்களா. லென்ஸ், லிப்ஸ்டிக், ஹேர் ஸ்டைல் அலங்காரம் இல்லாமல், மேக்கப், நகைகள் இல்லாமல் நான் இப்படித்தான் இருப்பேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அட, மேக்கப் இல்லாமலும் டிடி அழகா இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்து அந்த புகைப்படத்தை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











