36 வயசு.. சிங்கிள்.. விவாகரத்து.. குழந்தை இல்ல.. விஜய் டிவி டிடியின் மகளிர் தின குட்டி ஸ்டோரி!

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு பிரபல தொகுப்பாளினியான டிடி ஷேர் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினியான டிடி விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவிலும் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் டிடி.

காதல் திருமணம்

காதல் திருமணம்

டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமா சின்னத்திரை என தொடர்ந்து வந்தார் டிடி. ஆனால் அதற்கு கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொழிலதிபருடன் காதல்?

தொழிலதிபருடன் காதல்?

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.

மாலத்தீவில் ரெஸ்ட்

மாலத்தீவில் ரெஸ்ட்

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இதில் அவரது இரண்டாவது காதலரும் பங்கேற்றதாக தகவல் பரவியது. தற்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வருகிறார் டிடி.

பிகினியில் ஆட்டம்

பிகினியில் ஆட்டம்

மாலத்தீவில் போட் ஹவுஸில் ஓய்வை கழிக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். மாலத்தீவில் பிகினியில் அவர் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வைரலானது.

டிடியின் குட்டி ஸ்டோரி

டிடியின் குட்டி ஸ்டோரி

இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிடி. அதில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடியப்படியே சாட் பேப்பரில் எழுதியுள்ள வாசகங்களை காட்டியுள்ளார்.

36 வயசு விவாகரத்து

36 வயசு விவாகரத்து

அதன்படி, 36 வயசு சிங்கிளாக இருக்கிறேன்.. 36 வயசில் விவாகரத்தாகியிருக்கிறேன்.. 36 வயசு இன்னும் குழந்தை இல்லை.. ஆனாலும் ஹேப்பி.. ஏன்னா ஒவ்வொருவருடைய டைம் லைனும் வேற.. உங்களுடைய டைம்லைனை என்ஜாய் செய்யுங்கள்.. ஹேப்பி வுமன்ஸ் டே என எழுதப்பட்டுள்ளது.

க்யூட் வீடியோ

இதனை ஆடியப்படி காட்டி மகளிர் தின வாழ்த்தை கூறியுள்ளார் டிடி. டிடியின் இந்த வாழ்த்தை பார்த்த நெட்டிசன்கள், க்யூட்டான வீடியோ என்றும் நீங்கள் உங்கள் டைம் லைனை டிசைட் பண்ணி சந்தோஷமாக இருங்கள் என்றும் கூறி வருகின்றனர். மேலும் பலர் டிடிக்கும் மகளிர் தின வாழ்த்தை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X