இவர மட்டும் இன்டர்வியூ பண்ணவே கூடாது.. லிஸ்ட்டில் பிரபல இயக்குநரை வைத்த டிடி!ஷாக்கில் கோலிவுட்!

Recommended Video

DD Worst interview:இவர மட்டும் Interview பண்ணவே கூடாது

சென்னை: பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி இவரை மட்டும் இனி இன்டர்வியூ பண்ணவேக் கூடாது என்ற முடிவில் இருப்பதாக பிரபல இயக்குனரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். எராளமான நிகழ்ச்சி விருது விழாக்கள் உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

முன்னணி நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரையும் நேர்காணல் செய்திருக்கிறார். இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் பலருக்கும் நெருக்கமானவர் டிடி.

டிடி லிஸ்ட்

டிடி லிஸ்ட்

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டிடி தான் இதுவரை நேர்க்காணல் செய்த பிரபலங்கள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன்படி இவர்களையெல்லாம் மீண்டும் நேர்காணல் செய்ய வேண்டும் என்றும், இவர்களை நேர்காணல் செய்யவே கூடாது எனவும் ஒரு லிஸ்ட்டை வைத்திருக்கிறார் டிடி.

கேட்காமல் இல்லை

கேட்காமல் இல்லை

அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை மீண்டும் நேர்காணல் செய்யவேண்டும் என விருப்பமுடன் இருப்பதாக கூறியிருக்கிறார். ஏஆர் ரஹ்மான் பாடலை கேட்காமல் இருப்பதே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

சீரியஸாக பேசுகிறார்

சீரியஸாக பேசுகிறார்

அதேபோல் இவரை மீண்டும் நேர்காணல் செய்யவேக் கூடாது என்ற பட்டியலில் இயக்குநர் மிஷ்கினை வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் டிடி. சாதாரணமாக பேசும் போது இயக்குநர் மிஷ்கின் நன்றாக பேசுவதாகவும் கேள்வி என கேட்டால் படு சீரியஸாக பேசுவதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ளார் டிடி.

கோலிவுட் அதிர்ச்சி

கோலிவுட் அதிர்ச்சி

கலகல என க்யூட்டாக பேசி பிரபலங்களையே ரசிக்க வைக்கும் டிடி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் குறித்து இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

டிடி விவாகரத்து

டிடி விவாகரத்து

கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி. 3 வருடங்களே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2017ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்துவருகிறார் டிடி.

ஏன் விவாகரத்து?

ஏன் விவாகரத்து?

கடந்த சில நாட்களாக டிடி குறித்து தவறான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவரது காதல் கணவர் அவரை ஏன் விவாகரத்து செய்தார் என்ற கருத்தும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X