DD - சின்ன வயசுலேயே பப்புக்கு சென்றேன்.. தொகுப்பாளர் டிடி ஓபன் டாக்

சென்னை: Divya Dharsini (திவ்ய தர்ஷினி) சிறிய வயதிலேயே தான் பப்புக்கு சென்றதாக தொகுப்பாளர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி தெரிவித்திருக்கிறார்.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் வெகு பிரபலமாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என்று ரசிகர்களாலும், செலிபிரிட்டிகளாலும் செல்லமாக அழைக்கப்படும் அவர் விஜய் டிவினியின் ஸ்டார் ஆங்கர்களில் ஒருவர். தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை தன்னுடைய ஜாலியான பேச்சால் போர் அடிக்கமால் நகர்த்தி செல்வதில் வல்லவர் திவ்ய தர்ஷினி. இதனால் அவருக்கென்று தனி ரசிகர்களே இருக்கின்றனர்.

Anchor DD Talks about her Marriage issue and Life Journey

திரைப்படங்களில்: சிறு வயதிலிருந்து சின்னத்திரைக்குள் வந்துவிட்டவர். சின்னத்திரை மட்டுமின்றி நளதமயந்தி உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியிருக்கிறார் அவர். கடைசியாக அவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை அடுத்த சில வருடங்களிலேயே பிரச்னையை சந்தித்தது. இதன் காரணமாக இரண்டு பேரும் பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர். அதனையடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்துவருகிறார் திவ்யதர்ஷினி.

Anchor DD Talks about her Marriage issue and Life Journey

டிடி பேட்டி: இந்நிலையில் டிடி அளித்த சமீபத்திய பேட்டியில், "பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் பற்றிய என்னுடைய புரிதல் வேறு மாதிரியாக இருந்தது. இப்போது அது மொத்தமாகவே மாறிவிட்டது. திருமணம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் ஆனால்தான் வாழ்க்கை முழுமை பெறும் என்றெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.

சர்ட்டிபிகேட் வேண்டாம்: திருமணம் செய்யாமல் இருப்பதால் எனது வாழ்க்கை குறித்த சர்ட்டிபிகேட்டை யாரும் கொடுக்க வேண்டாம். எனக்கு அது தேவையும் இல்லாதது. எனக்கான சட்டிபிகேட்டை நானே எனக்கு கொடுத்துக்கொள்வேன். என்னைப் பற்றி எனக்குதான் முழுமையாக தெரியும். நான் டீன் ஏஜிலேயே அதாவது 14,15ஆவது வயதிலேயே பப்புகளுக்கு, பார்ட்டிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் எனது அம்மா அனுமதிக்கவில்லை. அதேசமயம் எனது அப்பாவோ தைரியமாக என்னை அனுப்பிவைத்தார். நான் குடிக்க மாட்டேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. இப்போதுகூட என்னை சுற்றி 100 பேர் குடித்தாலும் நான் குடிக்கமாட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X