டிடி அக்கா தெரியும்... டிடி அம்மாவ பார்த்திருக்கீங்களா..?

By Vignesh Selvaraj

சென்னை : பிரபல தொகுப்பாளினிகளில் ரசிகர்கள் பலருக்கு மிகவும் ஃபேவரிட் என்றால் அது திவ்யதர்ஷினி என்கிற டிடி தான்.

விஜய் டி.வி-யில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வமாகப் பார்ப்பார்கள்.

இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி முதன்முதலாக தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

டிடி அம்மா

டிடி அம்மா

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி-யின் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள். அதனால், தனது அம்மாவின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் டிடி.

விவாகர்த்து கேட்ட டிடி

விவாகர்த்து கேட்ட டிடி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனத்தால் ரசிகர்களையும், பிரபலங்களையும் ஈர்த்த டிடி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் டிடி விவாகரத்துக்கு விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

டிவி நிகழ்ச்சிகளில் கவனம்

டிவி நிகழ்ச்சிகளில் கவனம்

திருமணத்தால் பல மாதங்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவந்த டிடி இப்போது விஜய் டி.வி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். திருமண உறவு கசப்பாக மாறியதை அடுத்து, தற்போது பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

ப்ரியதர்ஷினி

ப்ரியதர்ஷினி

திவ்யதர்ஷினியின் அக்கா, ப்ரியதர்ஷினி சன் டி.வி-யில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் மூலமாகத்தான் பேச்சாற்றல் மிகுந்த டிடி தொலைக்காட்சி உலகுக்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X