விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாங்கும் சம்பளம்.. ஆத்தாடி ஹீரோயினை மிஞ்சிடுவாங்க போல!

சென்னை : தொகுப்பாளினி டிடி எனும் திவ்ய தர்ஷினியை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் சரி செம கில்லாடி..

தொகுப்பாளர்கள் எத்தனை பேர் புதுசு புதுசாக வந்தாலும் மக்கள் மனதில் இவருக்கு என்று தனி இடம் உண்டு.

இரு தினங்களுக்கு முன்பு பிரியங்கா சம்பளம் குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது டிடி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திவ்யதர்ஷினி

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். தன்னுடைய திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார்.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இவர் தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

பிரபலங்களின் இன்டர்வியூ

பிரபலங்களின் இன்டர்வியூ

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அண்மையில் நயன்தாராவை இன்டர்வியூ எடுத்திருந்தார். இந்த இன்டர்வியூ வேறலெவலில் இருந்தது, ஆர்.ஆர்.ஆர் பட ப்ரோமாஷனுக்காக ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை இன்டர்வியூ எடுத்தார்.

சம்பள விவரம்

சம்பள விவரம்

இந்நிலையில், டிடி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வரும் இவர் ஒரு எபிசோடிற்கு ரூ. 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது, டிடி ஜோஸ்கா இமைபோல் காக்க படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X