வீட்டுக்கு வந்தால் என் காலை பிடிக்க வேண்டும்.. கணவன் அப்படித்தான் இருக்கணும்.. மனம் திறந்த டிடி
சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.
டிடியால் ஃபேமஸான நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அவரைத் தொடர்ந்து டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருந்த சூழலில் டிடி தொகுத்து வழங்கியதை அடுத்து மேலும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

விலகிய டிடி: காஃபி வித் டிடி நிகழ்ச்சியை மட்டுமின்றி பிற நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. மேலும் சினிமாக்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது.
சிங்கிள்தான்: ஸ்ரீகாந்த்தை பிரிந்த பிறகு தனது கரியரில் முழு கவனத்தை செலுத்திய அவர்; இரண்டாவது திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முடிவு எதையும் எடுக்காமல் இப்போதுவரை சிங்கிளாகவே இருந்துவருகிறார். முன்னர் போல் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காவிட்டாலும்; பிரபலங்களிடம் பேட்டி எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் டிடி.
டிடி பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "பைக்கில் ரவுண்டு அடிப்பது, காலரை தூக்கிவிட்டுக்கொண்டு ரக்கட் பாயாக வரும் ஆண்களைத்தான் 18 வயது பெண்களுக்கு பிடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஆண் மகனுக்குரிய செயல் இல்லை. நான் வேலை முடித்து வீட்டுக்கு செல்லும்போது அவர் எனது காலை பிடித்துவிடுபவராக இருக்க வேண்டும்.
அப்படி செய்ய வேண்டும்: அதேபோல் எனக்காக அவர் காஃபி போட வேண்டும், சமையல் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஆண்மகனாகத்தான் இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு அப்படி பணிவிடை செய்வதை பார்த்து மற்ற ஆண்களோ என்ன செய்கிறாய் என்று கேட்கலாம். முக்கியமாக, மனைவியுடன் நடந்துசெல்லும்போது தனது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு, கை பையை சுமந்து செல்பவர்தான் ஆண்மையுடைய ஆண்" என்றார்.


Click it and Unblock the Notifications











