Dhivyadharshini: சட்டை பட்டனை கழட்டி அட்டகாசமான போஸ்.. டிடியை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!

சென்னை: தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக தனக்கே உரிய ஸ்டைலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது டிவியில் அவ்வளவாக தலைகாட்டாத இவர், படத்தின் இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் இதயத்தை பறிகொடுத்து வருகின்றனர்.

பாக்யராஜ் இயக்கிய தாவணி கனவுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த பிரியதர்ஷினியின் சகோதரி தான் திவ்யதர்ஷினி. இவரும், பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்தார். அதன் பின் அந்த தொலைக்காட்சியில், ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடிக்கு எடுத்துகொடுத்தது காஃபி வித் டிடி தான். அந்த நிகழ்ச்சிக்கு பின் டிடியை ரசிகர்கள் அனைவரும் அக்கா என்று அழைத்து வருகின்றனர்.

Divyadarshini DD photos

திவ்யதர்ஷினி: டிடிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நண்பர்களாக உள்ளனர். ஷாருக்கான பட நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கிய போது, ஷாருக்கான டிடியை தேடி வந்து கட்டிப்பிடித்து வாழ்த்தினார். அதே போல, நயன்தாரா தனது திருமணத்தில் குறிப்பிட்ட சில நடிகர்களைத் தான் அழைத்திருந்தார்.அந்த வகையில் தோழி என்கிற முறையில் டிடிக்கு சிறப்பான அழைப்பு விடுக்கப்பட்டதால், நயன்தாரா விக்கி திருமணத்தில் டிடி கலந்து கொண்டார். அந்த அளவிற்கு நடிகர்களுக்கு டிடியை பிடிக்கும்

Divyadarshini DD photos

வயசே ஆகாதா: பத்து ஆண்டுக்கு மேலாக கால் வலியுடன் அவதிப்பட்டு வந்த டிடிக்கு அண்மையில் காலில் மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து குணமடைந்த டிடி தற்போது, பலவிதமான பாடலுக்கு ஆட்டம் போட்டு வருகிறார். கால் வலி இருக்கும் போதே, டான்ஸ் ஆடுவது பிடிக்கும் என்பதால் ஆட்டம் போடும், டிடி தற்போது அந்த வலியில் இருந்து விடுபட்டுள்ளதால், ஜாலியாக டான்ஸ் ஆடி வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி தற்போது, சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் எப்போதும் வயசே ஆகாதா என கேட்டு வருகின்றனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Divyadarshini DD photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X