இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி

சென்னை: தனியார் சேனலில் தொகுப்பாளினியாக ஃபேமஸ் ஆனவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அவர் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் தன்னுடைய விவாகரத்து முடிவு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் திவ்யதர்ஷினி.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

Anchor Divyadarshini Talks about Her Divorce Experience

ஃபேமஸான நிகழ்ச்சி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அவரைத் தொடர்ந்து டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஏற்கனவே அந்த நிகழ்ச்சிக்கு பலர் ரசிகர்களாக இருந்த சூழலில் டிடி தொகுத்து வழங்கியதை அடுத்து மேலும் பலர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்.

விலகிய டிடி: காஃபி வித் டிடி நிகழ்ச்சியை மட்டுமின்றி பிற நிகழ்ச்சிகளையும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கினார். இதன் காரணமாக விஜய் டிவியின் அடையாளமாகவே மாறினார் திவ்யதர்ஷினி. இந்தச் சூழலில் அவர் விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இருந்தாலும் திரைப்பட விழாக்களை அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் டிடி: திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் தோன்றக்கூடியவர். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி மற்றும் இன்னும் சில படங்களில் தன்னுடைய சிறு வயதில் தோன்றினார் அவர். கடைசியாக சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தில் நடித்தவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். படம் இன்னும் வெளியாகவில்லை

திருமணம் டூ பிரிவு: திவ்யதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணத்துக்கு பிரபலங்கள் பலரும் குவிந்தனர். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. எதற்காக இரண்டு பேரும் விவாகரத்து செய்தார்கள் என்பது தெரியவில்லை. விவாகரத்துக்கு பிறகு டிடி சிங்கிளாகவே இருந்துவருகிறார்.

டிடி பேட்டி: இந்நிலையில் திவ்யதர்ஷினி அளித்த ஒரு பேட்டியில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பழைய பேட்டி இப்போது திடீரென சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விவாகரத்தை நான் எனது வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கிறேன். நான் விவாகரத்து ஆன ஒருவர் என்பதை மக்கள் நினைவு வைத்துக்கொள்ளவில்லை. நான்தான் அதை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

நிறைய கற்றுக்கொடுத்தது: அந்த விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. அந்தச் சமயத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து அந்த முடிவை எடுத்தேன். அப்போதிருந்த சூழலும் எனக்கு உதவியாக இருந்தது. அதுவும் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம்தான். அதேசமயம் விவாகரத்து கஷ்டமாக இருந்ததும் உண்மைதான். ஆனால் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தேன்.

அப்போதுதான் உணர்ந்தேன்: ரம்யா கிருஷ்ணனை ஒருமுறை பேட்டி எடுக்க சென்றபோதுதான் விவாகரத்து உறுதியானது தெரியவந்தது. எல்லாமே முடிந்துவிட்டது என்று அப்போது உணர்ந்தேன். இருந்தாலும் விளைவுகளை சந்தித்துதானே ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பேட்டியை எடுத்து முடித்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X