மரண படுக்கையில் அப்பா.. டிடி செய்துகொடுத்த சத்தியம் இதுதானாம்.. வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம்?

சென்னை: சின்னத்திரையில் நுழைந்து தமிழ்நாடு மக்களிடையே படு ஃபேமஸாக மாறியவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனியார் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவரை அவரது ரசிகர்கள் அழைப்பதும் உண்டு. இப்போது அந்தத் தனியார் சேனலிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களை உருக செய்துள்ளது.

சின்னத்திரையில் நுழைந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் அதிகம். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ப்ரியா பவானி ஷங்கர் என்று அந்தப் பட்டியல் நீளும். இவர்களுக்கெல்லாம் முன்னோடி என்றால் அது டிடி என்கிற திவ்ய தர்ஷினிதான். குழந்தை நட்சத்திரமாக உள்ளே நுழைந்து அப்போதே சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் திவ்யதர்ஷினி. அதன் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக சென்று பட்டையை கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anchor Divyadharshini Emotional Talks about Her Father At Latest Interview

காஃபி வித் டிடி: திவ்யதர்ஷினி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதனை தனது கலகலப்பான பேச்சாலும், ஆட்டிட்டியூடாலும் சலிப்பு தட்டாமல் நகர்த்தி செல்வதில் வல்லவர். சமயங்களில் அவரது அந்த செயல்பாடுகள் ஓவர் டோஸாகி விமர்சனத்தையும் சந்தித்தவைதான். இருந்தாலும் டிடிக்கு ரசிகர்கள் அதிகம்தான். அப்படி அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடிதான். முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் அந்த நிகழ்ச்சியை அனுஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். அனுஹாசன் பக்குவமாக கொண்டு செல்ல, டிடியோ அந்த நிகழ்ச்சியை ரகளையாக கொண்டு சென்றார்.

சின்னத்திரை சூப்பர் ஸ்டார்: அந்த நிகழ்ச்சி மட்டுமின்றி டிடி பணியாற்றிய தனியார் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சிகளையும் தனது பாணியில் கொண்டு சென்று அப்ளாஸை அள்ளினார். அதன் காரணமாக சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அவரை அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். ஆனால் இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை தான் பணியாற்றிய சேனலிலிருந்து விலகியிருக்கிறார் அவர். அது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கிறது.

திரைப்படங்களில்: சின்னத்திரையில் தலை காட்டாமல் இருக்கும் டிடி சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்துவிட்டது. இப்போது சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார் டிடி. இந்தச் சூழலில் தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் டிடி.

டிடி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "எனது தந்தை மரண படுக்கையில் இருந்தபோது அவருக்கு நான் ஒரு சத்தியம் செய்துகொடுத்தேன். அதாவது அவர் இறக்கும் தருவாயில் என்னிடம் அவர், 'இனி இந்தக் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று கூரினார். அதற்கு நானோ, "நீங்கள் கவலைப்படாதீர்கள் அப்பா. நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று சத்தியம் செய்துகொடுத்ததாக தெரிவித்தார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது. டிடியின் தந்தை 19 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X